தமிழன் வீதி வலைத்தளம் தொடங்கி 5 வருடம் ஆகிறது. 'Join this site' என்ற 'சிறு பொறியமைப்பு' (Gadgetக்கு அதுதான் தமிழ் மொழிபெயர்ப்பு என்கிறது அகரமுதலி) என்ற உபகரணத்தை தொலைத்து விட்டேன். எங்கே எந்த அசம்பாவித நேரத்தில் அந்த கேட்ஜட்டை தொலைத்தேன் என்று தெரியவில்லை. நானும் தேடாத தளமில்லை, போகாத கூகுள் இல்லை. தேடிய இடமெல்லாம் 'ஆஆவ்வ்வ்தான். டாஷ்போர்ட், லேஅவுட்,ADD Gadget என்று என்னன்னவோ செய்து பார்த்தும், ஒரு பயனுமில்லை.
பார்க்கும் எல்லா வலைத்தளத்தில் 'Join this site' சிறு பொறியமைப்பு இருக்க எனது வலைத்தளம் மட்டும் அந்த Gadget இன்றி இருந்தது. சிலர் கேட்கவும் செய்தனர். ஆனால் அதன் கேட்ஜட்டை சேர்ப்பதில் மட்டும் இழுபரி நிலை இருந்தது. அந்த பொறியமைப்பை எப்படி சேர்ப்பது என்ற தொழிற் நுட்பம் எனக்குத் தெரியவில்லை. அதை முழுமையாக சேர்ப்பதிலும் எனக்கு ஒரு சுனக்கம் இருந்தது.
இன்றைக்கு எதேச்சையாக 'how to add join this site on blogger' என்று கூகுளில் கிளிக்கினேன். உடனடி பலன் கிடைத்தது. யானி ஃபிரேம் http://yaniframe.blogspot.in என்பவர் கேட்ஜட்டை இணைப்பது எப்படி என்று அழகாக பதிவுவிட்டிருந்தார். புரியும்படி பதிவிட்டு இருப்பதுதான் இப் பதிவின் சிறப்பு.
நன்றி யானி பிரேம் .
இனி வழி முறைகள்:
1 Go to your Dash Board of your Blog.
2 Click on Layout tab.
3 Click on Add Gadget Button
4 Now go to 2nd Option ie More Gadgets at left side you can see as blow
5 Now in search box type 'Join this site widget by google' and give enter.
6 Select the Option
இப்படி செய்ததில் எனக்கு கேட்ஜட் வரவில்லை. அதனால் அந்த (5 வது பாயிண்டில் உள்ளது) Search Boxல் 'Member' என்று டைப் செய்ய, இம் முறை 'Join this site' என்ற 'கேட்ஜெட்' வந்தது.
கிட்டத்தட்ட பிளாக் தொடங்கிய போது இருந்த கேட்ஜட் தற்போது மீண்டு(ம்) வந்துவிட்டது.
இனி யாவரும் என் வலைத்தளத்தில் இணையலாம்.
7 கருத்துகள்:
அடடா... ஒரு வார்த்தை கேட்டிருக்கலாமே... இருந்தாலும் இணைத்தமைக்கு வாழ்த்துக்கள்... இணைந்து விட்டேன்...
ஒளித்து வைத்திருந்தது : அறிய நம்ம நண்பரின் தளம் : http://www.tamilvaasi.com/2013/07/add-follower-widget-in-tamil-blogs.html
நேற்றைய நண்பரின் பதிவு : http://www.bloggernanban.com/2013/10/blogger-follower-widget.html
இணையத்தான் வந்தேன் ...ஆனால் கேட்ஜெட்டை காணலயே...மீண்டும் முயற்சிசெய்து கொண்டு வாருங்கள் ...காத்திருக்கிறேன் !
உங்கள் மகிழ்ச்சி, உங்கள் முகத்தில், மன்னிக்கவும் உங்கள் எழுத்துக்களில் தெரிகிறது. வாழ்த்துக்கள்! இணைந்து விட்டேன்!
நன்றி தித.
முன்னடியே உங்களிடம் கேட்டு இருக்கலாம். மறந்துவிட்டேன்.
பகவான்ஜி
இப்போது சரியாக வருகிறது. மீண்டும் இணையலாம். பூட்டிங் ஆகுவதற்கு நேரம் எடுத்துக் கொண்டு இருக்கும்.
@ தி.தமிழ் இளங்கோ
நன்றி அய்யா!
உண்மைதான் வலைத்தளம் தொடங்கிய போது ஆர்வக் கோளாரில் நாம் ஏதோ செய்யப் போக, அந்த கேட்ஜட் முழுமையாகவே இல்லாமல் போய்விட்டது. என்னால் முழு மூச்சில் அதை கொண்டுவர நேரம் ஒதுக்க முடியவில்லை. அதனால்தான் இத்தனை வருடம் தாமதம்.
இப்போது கிடைத்துவிட்டதால்தான் அந்த மகிழ்ச்சி!!!.
இணைத்தமைக்கு வாழ்த்துக்கள் நண்பரே. இதோ நானும் இணைகின்றேன். தீப ஒளித் திருநாள் வாழ்த்துக்கள்
கருத்துரையிடுக