“நீ அதுக்கு சரிபட்டு வரமாட்டே” என்ற வடிவேலின் காமெடி நினைவிருக்கலாம். படத்தில் அவரது தந்தை முதற்கொண்டு அவரது தாயார்வரை அவரை “நீ அதுக்கு சரிபட்டு வரமாட்டே”, “நீ அதுக்கு சரிபட்டு வரமாட்டே” என்று சொல்லி சொல்லியே தட்டி கழிப்பார்கள். கடைசிவரையில் எதற்கு சரிபட்டு வரமாட்டார் என்பதையும் சொல்ல மாட்டார்கள். ‘எதற்கு சரிபட்டு வரமாட்டேன்’ என்று தெரியாமல் குழம்பியே, ஊரைவிட்டு வடிவேல் செல்வது போல் அந்த திரைப்படத்தில் காட்சி அமைக்கப்பட்டு இருக்கும்.
கொஞ்சம் யோசித்துப் பார்த்தால், ஒரு உண்மை புலப்படும்.
அரசியல்தான் வடிவேலுக்கு சரிபட்டு வராது. அது நாள் வரையில் உச்சத்தில் இருந்த ஒரு வடிவேல் திடிரெண்டு அரசியலில் ஈடுபட்டு, தனது இருப்பை இழந்து இருக்கிறார் என்றால், அரசியல்தானே வடிவேலுக்கு சரிபட்டு வராது!.
மிக தன்னிச்சையான ஒரு காட்சி, உண்மையாகிவிட்டதே என்று வருத்தமாக இருக்கிறது.
எதுக்கு சரிபட்டு வரமாட்டேன்னு வடிவேலுக்கு இப்ப புரிஞ்சி இருக்கும்.
12 கருத்துகள்:
//எதுக்கு சரிபட்டு வரமாட்டேன்னு வடிவேலுக்கு இப்ப புரிஞ்சி இருக்கும்//
--- ஹி... ஹி... எனக்கும் இப்ப புரிஞ்சிடுச்ச்சீ.
வடிவேலு, மிகச்சிறந்த நகைச்சுவையாளர். அவரைத் திரையுலகம் இழந்துவிடக்கூடாது. நினைவூட்டியமைக்கு நன்றி.
வடிவேலு நிச்சயம் புரிந்து கொண்டிருப்பார். உணர்ந்து கொண்டிருப்பார்.
வடிவேலு மீண்டும் திரைத் துறையில்
மின்னுவார்
சரி தான்... மறுபடியும் வரட்டும்...
அற்புதமான கலைஞன் வடிவேலு .. அவர் மீண்டும் வர வேண்டும் .. இங்குள்ளவரை மகிழ்விக்க வேண்டும்
@ NIZAMUDEEN
நன்றி நிஜாம். இனியாவது வடிவேலு போன்ற நல்லதொரு கலைஞர்கள் அரசியலில் ஈடுபடுவதை தவிர்க்கவேண்டும்.
@ Chellappa Yagyaswamy.
நன்றி சார்.
மிக இயற்கையான நடிப்பாளி. அவர் மீண்டும் வருவார் என்று எதிர்பார்ப்போம்.
@ கரந்தை ஜெயக்குமார்
தங்கள் கருத்திற்கு நன்றி அய்யா,
புறக்கணிப்பை விட நல்லதொரு கிரியா ஊக்கி இருக்க முடியாது. அந்த பாரா முகமே அவரை மீண்டும் உச்சாணி கொம்பில் ஏற்றும்.
நன்றி திண்டுக்கல் தனபாலன்,
அவர் இன்னேரம் அனைத்தையும் உணர்ந்திருப்பார். காலம் அவரை நல்லதொரு இடத்திற்கு மீண்டும் கொண்டு வரும் என்று நம்புவோம்.
@ SSK (GMB)
அய்யா அவர்களுக்கு,
எனது வலைத்தளத்திற்கு வருகைத் தந்து கருத்திட்டமைக்கு மிக்க நன்றி.
வடிவேலு ஒரு தொழிற் நேர்த்தி கலைஞர், அவரது வருகையே தற்போதைய இரட்டை வசன காமெடிகளிலிருந்து விடியல் கிடைக்கும்.
பல சமயம் வடிவேல் தான் என் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான சத்தை தந்து கொண்டிருக்கின்றார்.
சரியா வார்த்தையை புடுச்சுருக்கீங்க.
ஜோதிஜி திருப்பூர் முதல் முறையாக கருத்திட்டமைக்கு எனது நன்றி!.
'எதுக்கு சரிபட்டு வரமாட்டேன்னு' இந்த வார்த்தை அவரே சொன்னதுதானே...? !
அன்ற அந்த வார்த்தைக்கு அர்த்தும் புரிந்து இருந்தால்,
இன்று இந்த பின்னடைவை வடிவேல் சந்தித்து இருக்கமாட்டார்.
கருத்துரையிடுக