வெள்ளி, அக்டோபர் 10, 2014

செகண்ட் லைனை உருவாக்காத ஜெயலலிதா!.

.  .

மேம்படுத்தப்பட்ட பதிவு !.

 
              "True Leaders don't create followers.... they create more leaders!" என்றொரு ஆங்கில பழமொழி உண்டு. இந்த பழமொழி ஒர்க்கவுட் ஆகாத தலைவர்களில் ஜெயலலிதாவும் ஒருவர். சொத்து குவிப்பு வழக்கில் சிறை சென்ற பிறகு அடுத்த தமிழக முதல் அமைச்சர் யார் என்பதில் பெரும் குழப்பம் ஏற்பட்டது. முன்னாள் தலைமை செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன் முதற்கொண்டு, வழக்கறிஞர் நவனீத கிருஷ்ணன், பொள்ளாச்சி ஜெயராமன், விசாலாட்சி நெடுஞ்சேழியன், அமைச்சர்கள் வைத்தியலிங்கம்,செந்தில் பாலாஜி வரை ஏகப்பட்ட பெயர்கள் பட்டியல் இடப்பட்டது. ஊடகங்கள் தங்கள் இஷ்டத்திற்கு ஒவ்வொரு பெயர்களை பரிந்துரைத்தனர்.

பெங்களூருவில் சொத்து குவிப்பு வழக்கில் கிடைத்த தீர்ப்புக்கு பின்னர் தமிழக அமைச்சர்களால், ஜெயலலிதாவை தொடர்பு கொள்ள முடியவில்லை. தண்டனை அறிவிக்கப்பட்ட உடனே, முறைப்படி சிறைத்துறையினரிடம் ஜெயலலிதா ஒப்படைக்கப்பட்டார். யார் அடுத்த முதல்வர் ? என்ற முக்கியமான முடிவு எடுக்கத் தெரியாமல் ஆளுக்காள் கையை பிசைந்துக் கொண்டு இருந்தனர். சிறையில் இருக்கும் ஜெவை யாராலும் தொடர்பு கொள்ள முடியவில்லை. நேரமோ ஓடிக் கொண்டு இருந்தது, உடனடியாக அடுத்த முதல்வரை அறிவிக்க வேண்டிய கட்டாயம் தமிழக அமைச்சரவைக்கு இருந்தது. ஜெயலலிதாவும் யார் அடுத்த முதல்வர் என்பதை முன் கூட்டியே தெரிவிக்கவும் இல்லை முன் கூட்டியே சொல்லவும் இல்லை. "அம்மா போய்ட்டு ஈவினிங் ரிட்டன் ஆயிடுவாங்க" என்றே எல்லோரும் நினைத்திருந்தனர்.

ஜெயலலிதாவிற்கு மருந்து மாத்திரைகளை சிறைச்சாலைக்கு அனுப்பியது வாயிலாக, யார் அடுத்த முதல்வர்? என்ற தகவலைத் தெரிவித்து, பிறகு எப்படியோ மருந்து சீட்டின் பின்புறம் ஜெ OP என்று எழுத....பிரச்சனை தீர்ந்து ஓ. பன்னீர்செல்வம் முதல்வரானார். செகண்ட் லைன் இல்லாததே இந்த கடைசி நேர தடுமாற்றத்திற்கு காரணம் என்கின்றனர் விஷயம் தெரிந்தவர்கள்.
ஒவ்வொரு முறையும் ஓ.பன்னீர் செல்வம் கட்டாயத்தின் பேரில் முதலமைச்சராக ஆக்கப்படுகிறார். அதிலிருந்து வெளிவந்த பிறகு அதற்கான எந்த தடயமும் இன்றி அவர் செயல்படுகிறார். இந்த முனி மனோ நிலை வேறு யாருக்கும் வருமா என்று தெரியவில்லை...?
செகண்ட் லைன்.

அரசியல் கட்சியோ, இயக்கமோ, போராளிகள் குழுவோ, இராணுவமோ, தனியார் நிறுவனங்களோ, ஊடகங்களோ, விளையாட்டு குழுவோ, எதுவாயிருந்தாலும் 'செகண்ட் லைன்' என்பது இன்றியமையாதது. நிறுவனங்கள் தங்கு தடையின்றி நடைபெற செகண்ட் லைன் என்பது தவிற்கமுடியாத ஒன்று. முடிவெடுக்கும் தலைமைக்கு அடுத்த நிலையில் இருந்து முடிவெடுப்பவரே செகண்ட் லைன் என்பார்கள். ஒரு நிறுவனத்தின் தலைவர் சந்தர்ப்ப சூழ் நிலையில் நிறுவனத்திற்கு வரமுடியாமல் போக நேர்ந்தால் அடுத்த இடத்தில் இருக்கும் தலைவரே முடிவெடுப்பார். இன்னும் புரியும்படி கூறுவதென்றால் கணவன் ஃபஸ்ட் லைன் என்றால்; மனைவி செகண்டு லைன். இந்த இரண்டு லைனும் இருந்தால்தான் குடும்பம் குடும்பமாக இருக்கும். கம்பெனி கம்பெனியாக இருக்கும்!. இது கட்சிகளுக்கும் பொருந்தும்.

சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்க சென்ற போது கூட, செகண்ட் லைனாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை நியமித்துவிட்டுதான் சென்றார். இதற்கு முன்பாக சென்ற ஜப்பான் பயணத்தின் போது செகண்ட் லைனை மோடி அறிவிக்கவில்லை. சிறிய நெருக்கடிக்குப் பிறகே இந்த தவறை அவர் திருத்திக் கொண்டார். இவன் எனக்கு அடுத்த நிலையிலா என்ற ஈகோகூட செகண்ட் லைனை அறிவிப்பதில் தாமதத்தை ஏற்படுத்தலாம்.

அதிமுகவை பொருத்தவரை இங்கு எல்லாமே ஜெயலலிதாதான். அவர் எடுப்பதுதான் இறுதி முடிவு. இரண்டாம், மூன்றாம், நான்காம் என்று எந்த இடத்திலும் யாரும் நிலையாக இருந்ததில்லை. இன்று உச்சத்தில் இருப்பவர்கள் அடுத்த நாளே மண்ணை கவ்வலாம். நிலையாமை என்பது ஜெயா அமைச்சரவையை பொருத்தவரை நிலையானது!.
ஆளாளுக்கு போராட்டம்.

ஜெயிலில் இருக்கும் ஜெயலலிதாவை மகிழ்விப்பதற்காக கட்சியின் உயர் மட்ட அமைச்சர் முதல் அடிமட்ட தொண்டன் வரை தங்கள் இஷ்ட்டதிற்கு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். கட்சியையும் போராட்டத்தையும் ஒருங்கிணைக்க ஆளும் இல்லை வழி நடத்த தலைமையும் இல்லை. பாராளுமன்ற உறுப்பினர்கள் டில்லியில் உண்ணாவிரதம் இருந்தால், தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள் எம்ஜியார் சமாதியில் உண்ணாவிரதம் இருக்கின்றனர். 'ஆள் இல்லாத மாட்டு வண்டி வயலில வேலை செய்யுற ஆத்தா மேல ஏறிச்சாம்' என்பது போல இருக்கிறது அதிமுகவினரின் செயல்பாடு.

தீர்ப்பு நாளான கடந்த 27ம் தேதி, பெங்களூர் பரப்பன அக்ரஹாரத்திற்கு மாற்றுத் துணி எதுவும் இன்றி, வெறுங் கையோடுதான் ஜெயலலிதா வந்திருந்தார். இந்த வழக்கில் வெற்றி பெற்று விடுவோம் என்ற எண்ணத்தை அவருக்கு சுற்றி இருந்தவர்கள் விதைத்து இருந்தனர். கர்னாடகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு தசரா விடுமுறை என்பதையோ, வழக்கு அவருக்கு சாதகமாக இல்லை என்பதையோ அவரிடும் சொல்லத் துணிந்த இரண்டாம் நிலை தலைவர்கள் அதிமுகவில் இல்லை என்பதுதான் உண்மை. "அம்மா ஒன்றும் ஆகாதும்மா" என்று குருட்டுத்தனமாக கூறுபவர்கள் தான் அவரிடம் இருந்தார்கள். அவர்களே இத்தகைய துயரத்தை ஜெயலாலிதாவிற்கு பரிசாக தந்திருக்கின்றனர்.

அதிமுக ஆட்சியில் அதிகார மையம் ஒரே இடத்தில் மையம் கொண்டு இருக்கும். ஜெவைத் தவிர வேறு யாரும் முக்கிய முடிவுகளை எடுக்க முடியாது. முக்கிய முடிவுகளுக்காக அமைச்சர்கள் காத்து இருக்க வேண்டும். ஆனால், திமுகவில் அதிகாரம் மையம் பரவலாக்கப்பட்டு இருக்கும். இந்த பரவலாக்கம் அரசு எந்திரம் விரைவாக நடைபெற உதவியாக இருக்கும். திமுக தலைமையை தொடர்பு கொள்ள, சாதாரண அடிமட்ட தொண்டனால் முடியும். ஆனால், இது அதிமுகவில் சாத்தியம் இல்லாத ஒன்று!.

தனக்கான செகண்ட் லைனை உறுவாக்குவதில்தான் ஒரு தலைவனின் வெற்றி இருக்கிறது. சரியான திறமையான தேர்வின் மூலம்தான் அது சாத்தியமாகிறது. அதன் வாயிலாகவே அந்தத் தலைவனின் வெற்றி பதிவு செய்யப்படுகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவனை நம்பிக்கைக்கு உரியவனாக, விரைந்து முடிவெடுக்கும் தீரனாக, நெருக்கடி நிலையில் சமயோசிதமான முடிவுகளை எடுக்கும் தொலைக் நோக்கு பார்வை கொண்டவனாக, தொண்டர்களை கவர்ந்து இழுக்கும் பேச்சாற்றல் மிக்கவனாக, தட்டிக் கொடுத்து வேலை வாங்கும் தலைவனாக, சமூக நோக்கம் கொண்ட சமூதாய சிற்பியாக, முன் வரிசையில் நின்று நல்லதொரு வழிகாட்டியாக என்று பல்வேறு திறமைகளை உள்ளடக்கியே இந்த செகண்ட் லைன் தேர்வு இருக்கிறது!.

அதற்கு மாறாக தனக்கு கீழே யாரையும் வளர விடக் கூடாது என்ற கொள்கை இருந்தால் அவ்வளவுதான். நீங்கள்தான் அந்த நிறுவனத்தின் உடனே வெடிக்கும் வெடி குண்டு!. தமக்கு அடுத்த நிலையில் இருப்பவர்கள், நமது காலை வாரமாட்டர்கள் என்ற உயர்ந்த நம்பிக்கை நமக்கு இருக்க வேண்டும். இல்லை காலை வாரித்தான் நான் மேலே வந்தேன் என்றால், உங்கள் காலையும் ஒருவன் வாரத் தயங்கமாட்டான்.

போகட்டும், செகண்ட் லைன் உருவாக்குவது என்பது ஒரு தலைவனின் அடிப்படை கடமை, அந்த கடமையிலிருந்து அவன் வழுவும் போதுதான், அந்த இயக்கத்தை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்வதில் பெரும் கூச்சலும் குழுப்பமும் ஏற்படுகிறது!.

அதுதான் இப்போது அதிமுகவில் நடந்துக் கொண்டு இருக்கிறது.....?!.

-தோழன் மபா.
() () () ()

 
முக நூலில் நான் எழுதிய  இந்த பதிவுக்கு வந்த பின்னோட்டங்கள்.....

  • Chandra Sekaran தான் இல்லாவிட்டால் நிறுவனமோ கட்சியோ அசையாது என்ற நிலையை உருவாக்க வேண்டும் என்றுதான் தலைமை விரும்புகிறது - இன்றைய சூழலில். செகண்ட் லைனில் அவர்களுக்கு நம்பிக்கையில்லை. அரசியலில் மட்டுமல்ல, நிறுவனங்களிலும்கூட
  • Vetriselvan Vck Arumai tholarae. Valimai atra katchigalil matumae second lind alladhu kuzhu irukkiradhu seyal padugiradhu tholar
  • Sandilyan Sambandam can you say the second line in Dmk, mdmk, congress, . see throughot india it is the condition now. most of the time the second line are their blood relative. In Admk any one can be cm think about dmk.
  • Mohan Raj மிக நேர்த்தி .....
  • Manikandan Vpmanikandan When sincere,persons are sidelined,where is the talk of 2nd line,today world believes in sycophants, not lending their ears. To grass roots,
  • Balaji Vasudevan in dmk the second line leaders is stalin, kani, alagiri , maran all family members of karuna. the only problem with jaya is she is single
  • Mahesh Babu Padmanabhan Sandilyan Sambandam யாருக்கு இதய நோய் முற்றி, பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யவேண்டுமோ அவர்களுக்குதான் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். அதை விடுத்து கண்ணில் கண்டவர்களுக்கு எல்லாம் செய்துவிட முடியாது. தற்போது அது அதிமுகவிற்கு தேவைப்படுகிறது. அதைத்தான் பேச முடியும். யார் உப்பைத் தின்றார்களோ அவர்கள்தான் தண்ணீர் குடிக்க வேண்டும்.

    அதிமுகவில் யார் வேண்டுமானாலும் முதல்வர் ஆகலாம் என்றால், அந்த யார் வேண்டுமானாலும் என்பவர்கள் யார்?. அவர்களுக்கு எந்த தகுதியின் அடிப்படையின் முதல்வர் பதவி வழங்கப்படுகிறது?. இவர் கொஞ்சமாய் குனிவார், இவர் நன்றாக முதுகை வளைத்து கீழே விழும்படி குனிவார், இவர் காலில் விழுந்தார் என்றால் நீங்கள்தான் அவரை எழுப்பிவிடவேண்டும் என்பது போன்ற தகுதிகள்தான் முதல்வர் பதவிக்கு அடையாளமா......????

    7
    7 October at 17:38 · Like · 2
  • Sandilyan Sambandam What are all the merits that Kani mozhi, stalin and other possess my friend. எந்த தகுதியின் அடிப்படையின் Raugal, in congress, stalin in DMk, Anubumani in PMK got their position in their party. இவர் காலில் விழுந்தார் because the relationship they have with the party leader.where us In ADMk, they have to show this kind of thing, expect this you can see all the the nonsense among the remaining party. Think about Vasan, PA C. in their own style they cool they bend for Sonia. Hiere in ADMK it is some what more visible that all. Apart from that are we vote and elect our MLA based on any qualification? if we select our MLA based on the gift he gives then he slelct the CM based on the benefit what he going to harvest that all. in this issue all are same7 October at 18:21 · Like
  • Sandilyan Sambandam if we think deeply we did the mistake by the way of voting and selecting ......
  • Mahesh Babu Padmanabhan Sandilyan Sambandam
    • குறிப்பிட்ட வேட்பாளரை ஓட்டு போட்டு ஜெயிக்க வைத்த வாக்களரை போல....அவருக்கு எதிராக வாக்கு அளித்தவர்களும் கனிசமாக இருக்கத்தானே செய்கிறார்கள். அவர்களையும் நாம் கணக்கில் எடுத்துக் கொள்ளத்தானே வேண்டும். மூடர்களின் கூடாரமோ என்று அஞ்சும் அளவிற்கு இன்றைய ஆட்சியாளர்களின் அடிவருடிகள் இருக்கின்றார்கள். வரிசையாய் நின்று ஹெலிகாப்டருக்கு சலாம் போடுவதும்,பதவி பிரமாணத்தின் போது அமைச்சர்கள் மூக்கை சிந்துவதும் எந்த நாட்டில் நடக்கிறது?. "கல் தோன்றி மண் தோன்றா முன் தோன்றிய ஒரு மூத்த குடியின் லட்சணம்" இதுதானா?.

      "காவிரியை வைத்துக் கொள், அம்மாவை விட்டுவிடு" என்று போஸ்டர் ஒட்டுகிறான் ஒருவன். அவனது வாயில் செருப்பால் அடிக்க வேண்டாமா?. டெல்டா விவசாயின் வேதனை தெரியுமா? அவனுக்கு. 'முப்போகம் இரு போகமாச்சி, இரு போகம் ஒரு போகமாச்சி ஒரு போகம் ஒன்றுமில்லாம போச்சு' என்பதை அந்த போஸ்டர் அடித்தவன் உணர்ந்திருந்தால் இப்படி எழுதியிருப்பானா...?.

      நாம் எதை இந்த உலகத்திற்கு கற்றுத் தருகிறோம். இதற்கான மாற்று என்ன என்பதை எப்போது நாம் சிந்திக்கப் போகின்றோம். சுரண்டலையும், சாதியத்தையும், இலவசங்களையும், அத்துமீறல்களையும், சட்டத்தை வளைக்கும் சாதுர்யத்தையும் யார் நமக்கு கற்றுத் தந்தார்கள்?. இன்றைய தமிழ் இளைஞனை எதை சொல்லி அவன் கை பிடித்து அழைத்துச் செல்கிறோம். அவனுக்கு தெரியாமல் போன நமது வரலாற்றை யார் அவனுக்கு சொல்ல போகிறார்கள்?. அரசாங்கமே மதுக்கடைகளை நடத்தும் காலத்தில்தானே அவன் பிறந்திருக்கின்றான். மது கெடுதல் என்றால் ஏன் அதை அரசாங்கமே நடத்துகிறது.....? என்ற கேள்விக்கு நாம் என்ன பதில் வைத்திருக்கிறோம்.

      ஆசிரியர்களாகிய நீங்கள்தான் ஆட்டம் காணும் நமது சமூதாயத்தை ஏற்றம் காண செய்ய வேண்டும்.

      செய்வீர்களா...?.
    7 October at 22:06 · Like · 2
  • Sandilyan Sambandam காவிரியை வைத்துக் கொள், அம்மாவை விட்டுவிடு" என்று போஸ்டர் ஒட்டுகிறான் ஒருவன். அவனது வாயில் செருப்பால் அடிக்க வேண்டாமா?. i don't have a second opinion in this mater sure we should do.
  • Sandilyan Sambandam ஆசிரியர்களாகிய நீங்கள்தான் ஆட்டம் காணும் நமது சமூதாயத்தை ஏற்றம் காண செய்ய வேண்டும்.
  • Sandilyan Sambandam ஆசிரியர்களாகிய நீங்கள்தான் ஆட்டம் காணும் நமது சமூதாயத்தை ஏற்றம் காண செய்ய வேண்டும். machi our hands are already tied you know, in Tn a teacher cannot scold , punish a student, the next day the teacher questioned by parents, politician, police, court, m...See More
  • Sandilyan Sambandam அரசாங்கமே மதுக்கடைகளை நடத்தும் காலத்தில்தானே அவன் பிறந்திருக்கின்றான். Ya it is a fact, all government want that their citizen wont think, for their benefit, they want that all Tamilian should be a drunken because, a drunken cannot think what is correct or wrong. so they want their citizen should be always under the influence of alchocal
  • Sandilyan Sambandam I want to register one point clear that am not a blind supporter of ADMK, as like others i want that a lovable, brilliant, able Tamilnadu, and where ever i go i should rise my collar that am a Tamilian
  • Mageshwar Anbazhagan முழுமனதோடு ஏற்றுக்கொள்ள வேண்டிய பதிவு.
    இத்தகு சூழ்நிலையில் பாதிக்கபடுவது நல்லது நடக்கும் என நம்பி வாக்களித்து வெற்றிபெற செய்திததிட்ட நம்போன்ற பொதுஜனமே.
  • Mageshwar Anbazhagan தமிழ்நாட்டின் மாணவர் சார்ந்த கல்விமுறை என்பது உயர்ந்த சிந்தனை, நல்லொழுக்கம், துணிவுடன் கூடிய இளைய சமுதாயம் அமையுமேயானால் அதனால் தமக்கும் தமைசார்ந்தோருக்கும் உண்டாகும் தீங்கினை நன்கறிந்தஅரசியல்வாதிகளினாலும், அதிகாரிகளினாலும் நன்கு திட்டமிடப்பட்டு வருங்கால சமூகத்தை பாழ் செய்ய பின்னப்பட்ட ஒரு சதிவலை.
    அறியாத வயதில் மாணவர்தம் தனிப்பட்ட சுதந்திரம் எனும் பெயரால் கொடுக்கப்படும் மட்டற்ற / கட்டுப்பாடற்ற அதிகாரம் குரங்கு கையில் கொடுக்கப்பட்ட பூமாலை என்பதினை அவர்கள் நன்கு அறிவர். இதுவும் ஒரு வகை போதையே.
    உயர்நிலை பள்ளி ஒன்றில் கணினி ஆசிரியையாக பணிபுரியும் என் மனைவி இன்றைய மாணவ மாணவியர் இடையே ஆசிரியர் குறித்த கண்ணோட்டத்தை என்னிடம் பகிரும் போது ஆசிரியர்களின் பரிதாப நிலையினையும் அவர்தம் பணியினை செம்மையாக நிறைவேற்ற முடியா பாதுகாப்பற்ற சூழலையும் கண்டு வருத்தமே மிஞ்சியது.
    Yesterday at 10:31 · Edited
    · Unlike · 1
  • Sandilyan Sambandam Exactly sir, once teaching profession is considers as a noble one, but now it is the worst one after police,
  • Mahesh Babu Padmanabhanநமது நண்பரின் நண்பர் PT மாஸ்டராக இருக்கிறார். அவரது பள்ளியில் நடந்த சம்பவத்தை கூறினார். ஜெ கைது பற்றி வகுப்பு மாணவர்களிடம் பேசி கொண்டு இருந்த போது....ஒரு மாணவன் எழுந்திருந்து "அம்மாவ கைது பண்ணது தப்பு சார். அவுங்கதான் எங்களுக்கு லேப்டாப் கொடுத்து இருக்காங்க, சைக்கிள் கொடுத்து இருக்காங்க, எங்க ஆயாவுக்கு ஆடு கொடுத்து இருக்காங்க அவுங்கள எப்படி சார் ஜெயில்ல போட முடியும்....?." என்று கோபத்துடன் கேட்டிருக்கிறான். அரசியல் தெரியாத புரியாத இளம் தளிர்களைக் கூட இந்த இலவசம் என்ற போதை மயக்கி வைத்து இருக்கிறது!.

    இலவசங்களை வழங்கி, வளரும் தலைமுறையை கெடுத்து இருக்கிறார்கள் இன்றைய அரசியல்வாதிகள். இப்படிபட்ட ஒரு தலைமுறையை நாம் உருவாக்கி வைத்திருக்கிறோமே, நாம்தான் குற்றவாளி!. இதை மாற்ற என்ன வழி.....எங்கிருந்து தொடங்க வேண்டும் என்பது கூட நமக்கு இன்னும் புரியவில்லை.
    Yesterday at 21:39 · Like
  • Mahesh Babu Padmanabhan Mageshwar Anbazhagan மகேஷ்வர் உங்கள் தமிழ் நடை நன்றாக இருக்கிறது!. தொடர்ந்து எழுத வாழ்த்துகள்!.
  • Srikkanth Pushpala No second lines only Horizontal lines.
    7 hrs · Unlike · 1
  • Mahesh Babu Padmanabhan

4 கருத்துகள்:

Unknown சொன்னது…

இப்படி நடக்கும்னு யாருங்க எதிர்ப் பார்த்தா ?எல்லாம் அந்த 'குன்கா'வினால் வந்த வினை )

-தோழன் மபா, தமிழன் வீதி சொன்னது…

பகவான்ஜி,

குன்ஹா காரணமில்லை. அப்போது விதைத்ததை இப்போது அறுவடை செய்கிறார்கள்.

Unknown சொன்னது…

அன்னைக்கு எவ்வளவோ விதைத்தாலும்,இதனை அறுவடை செய்யும் 'பாக்கியம் 'தந்தது நீதியரசர் குன்ஹாதானே )
இன்னும் அறுவடைக்கு நிறைய காத்திருக்கே)

ராவணன் சொன்னது…

திமுகவில் செகண்ட் லைனில் இருப்பது யார்? அவரது குடும்பத்தினர் மட்டுமே... எம்ஜியார் நோய்வாய்ப்பட்டு இருந்தபோது எந்த செகண்ட் லைனும் இல்லை. குடும்பம் குட்டி இல்லாதவர்களுக்கு செகண்ட் லைன் என்பது தானாக உருவாகும். அதை யாரும் ஏற்படுத்தத் தேவையில்லை.

'அடியோஸ் அமிகோ' -மலையாள திரைப்படம் விமர்சனம்

படம் பார்த்தப்பின் ஏனோ... வாய் விட்டு அழணும் போல தோன்றியது.  ஒரு சின்னக் கதையை எடுத்துக்கொண்டு சரசரவென, நூல் பிடித்து, வல்லியதொரு சுவாரசியமா...