தமிழர்களின் பூர்வீகத் தீவான இலங்கையில், சிங்களவர்கள் குடியேறுவதை காட்டும் இலங்கை அரசின் தபால் தலை. |
1956-இல் 'விஜயனின் வருகை' என்ற தலைப்புடன் சிறப்பு தபால் தலை ஒன்றை அன்றைய சிங்கள இனவாத அரசு வெளியீட்டது. தமிழ் அரசி கரையில் வீற்றிருக்க, விஜயனின் தலைமையிலான சிங்களவர்கள் தங்களது 'சிங்க உருவம்' பொறித்த கொடியுடன் கப்பலில் கரை ஒதுங்க வருகின்றனர்.
சிங்களர்கள் வந்தேறிகளாக இலங்கை கரையில் ஒதுங்கும் உண்மையை உலகிற்கு சொல்லும் பொருட்டு அந்த தபால் தலை இருந்தது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த சிங்கள தலைவர்கள் இத் தபால் தலைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். "விஜயன் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வந்தவன் என்ற கருத்து ஏற்கத்தக்கது அல்ல. தவிரவும், விஜயன் வந்தபோதே இங்கு குவேனி என்ற தமிழ்ப் பெண் இருந்திருக்கிறாள் என்று கூறினால், இலங்கையின் பூர்வீக குடிகள் தமிழர்கள் என்பதை நாமே ஒப்புக்கொண்டது போலாகி விடும். எனவே, இந்தத் தபால் தலையை வாபஸ் பெற வேண்டும்" என்று கூறினார்கள்
அதுகாறும் நாங்கள்தான் இத் தீவின் பூர்வ குடிகள் என்று முழங்கிவந்த சிங்கள பேரினவாத அரசு, சுதாரித்துக் கொண்டு இத் தபால் தலையை திரும்ப பெற்றுக் கொண்டது. அதற்குள் இத் தபால் தலை உலகம் முழுவதும் பரவி விட்டது.
இத் தபால் தலையை இலங்கை அரசு தனது 500வது வருட கொண்டாட்டத்தின் போது வெளியீட்டதா என்று தெரியவில்லை?
தினத்தந்தியில் வந்ததை நானும் ஸ்கேன் செய்து வைத்துக் கொண்டேன். இதை எனது முக நூலில் சமீபத்தில் வெளியிட சுமார் 356 பேர் இப் புகைப்படத்தை share செய்துக் கொண்டார்கள்.
காலங்கள் மாறி காட்சிகள் மாறினாலும்,
வரலாற்றை திருத்தி வாழ்க்கையை அழித்தாலும்
உண்மைக்கு அழிவில்லை.
தனி ஈழம் வெகு தூரத்தில் இல்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக