செவ்வாய், அக்டோபர் 04, 2011

"நைட்டியை கழற்றவே மாட்டாங்களா...?"




பெண்களுக்கு இரவு உடையாக  இருக்கவேண்டும் என்று கண்டுபிடித்ததுதான் இந்த 'நைட்டி'. ஆனால்,  இன்று அது படும்பாடு சொல்லிமாளாது.  என்னமோ... நைட்டிதான் நமது பெண்களின் தேசிய உடை என்று,  நமது பெண்கள் நினைத்துவிட்டார்களோ என்னவோ...?  அந்த அளவிற்கு இந்த நைட்டி அவர்கள் உடலிலிருந்து இறங்குவதே இல்லை.


வூட்ல இருந்தாலும் நைட்டிதான், தெருவில் நடந்தாலும் நைட்டிதான், கடைக்கு போனாலும் நைட்டிதான், பக்கத்தில இருக்கிற பள்ளிக்கூடத்துக்கு போனலும் நைட்டிதான் என்று நைட்டியை தமது ஒரு அங்கமாகவே பெண்கள் நினைத்துவிட்டார்கள்.

வீட்ல ஆம்பிளைங்க  என்னதான் காட்டு கத்தலா கத்தினாலும், அது 'செவிடன் கதில ஊதுன சங்குதான்'. வீட்டில் இருக்கும்போது நைட்டியை விட்டு பெண்கள் வேறு உடைக்கு  மாறுவதில்லை.


உடலை பெறுக்க வைக்கும் நைட்டி!


தொடர்ந்து நைட்டியை அணிவதால், அது பெண்களின் உடலை கட்டுக் கோப்பாக வைத்துக் கொள்வதில்லை. இடுப்பு, பின்பக்கம், அடிவயிறு  போன்ற இடங்களில் எந்தவித இறுக்கமும் இல்லாததால் சதை அதன் போக்கில் பெறுக்கத் தொடங்கிவிடுகிறது.  இதனால் சிறிய வயதினிலேயே பெண்கள் அதிக வயதானவர்கள் போல் தெரியத்தொடங்கிவிட்டனர்.

மார்பு  தொங்கிவிடாமல் இருக்குக்கவும்,  பார்க்க (?) எடுப்பாக இருக்கவும், பழங்காலங்களில் பெண்கள் துணியை (கச்சை) வைத்து தங்கள் மார்பை இருக்கமாக கட்டிக் கொள்வார்கள். 

"கச்சை அணிந்த கொங்கை மாந்தர்
கண்கள் வீசு போதிலும் அச்சமில்லை அச்சமில்லை
அச்சமென்பதில்லையே"  என்றார் பாரதி.

உடலில் தேவையான இடங்களில் எப்போதும்  இறுக்கம் இருக்கவேண்டும். அப்போதுதான் அதனதன் அளவில்'அது' இருக்கும்.  இல்லையென்றால் பெறுக்கவும் வழியுண்டு, சிறுக்கவும் வழியுண்டு.


நைட்டி இரவு உடைதானே...?


நைட்டி இரவு உடைதான் என்பதை  மறந்து பல நாள் ஆயிற்று. பகல் முழுவதும் உழைத்து களைத்துப் போகும் பெண்கள் இரவிலாவது தங்களைச் சுற்றி பின்னிப் பிணைத்திருக்கும் ஆடைகளுக்கு விடை கொடுத்து,   கொஞ்சம் சுதந்திரமாக இருக்கவேண்டும்,  என்ற என்னத்தில்தான் இந்த நைட்டி வந்திருக்கும் என்பது எனது என்னம்.

"ஆமா,   வீட்டுக்கார ஐயா, நடுக்கூடத்தில் மேலாடை அணியாமல் உக்காந்து டிவி பாப்பாரு. ஆனா,  அந்த வீட்டுக்கார அம்மா மாட்டும் சமையல் கூடத்தில்,  எட்டு முழம் சேலையை சுத்திக்கொண்டு  புழுங்கிச் சாகவேண்டுமா?  நல்லா இருக்குங்க உங்க டீலிங்கு"


ஆனால், எது சொளகரியமாக இருந்ததோ.... அதுவே  இன்று நமது கலாச்சாரத்தை பதம் பார்த்துக் கொண்டு இருக்கிறது.  பேருந்து செல்லாத சிறு சிறு மலை  கிராமங்களில் கூட,  நமது பெண்கள் நைட்டி அணிகிறார்கள்.  குச்சி ஊன்றி நடக்கும் ஆயாக்கள் கூட நைட்டி அணிந்திருப்பதை பார்த்திருக்கிறேன்.

நைட்டியை பகலில் கூட கழற்ற மறுக்கிறார்கள்.

ஐரோப்பியர்கள்தான்  சூழ் நிலைக்கேற்ப ஆடை அணியும் பழக்கத்தை கொண்டுவந்தனர்.  பகலில் ஒரு ஆடை, இரவினில் ஒன்று, வாரயிறுதிக்கு ஒன்று, அலுவலகத்திற்கு ஒன்று  என்று ஒரு நாளில் இரண்டு மூன்று செட் ஆடைகளை அணிகின்றனர். 

பல வழிகளில் அவர்களை காப்பி அடிக்கும் நாம்,  இனியாவாது அந்தந்த ஆடைகளை  அந்தந்த  சீதோஷன நிலைகளில் அணியவேண்டும்.

அதனால், இனியாவது இல்லத்தரசிகள் தங்கள் இரவு உடையான 'நைட்டியை' இரவில் மட்டுமே,  அணிய வேண்டுமாய் வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன். 

படங்கள் உதவி: கூகுல்.

19 கருத்துகள்:

கொ. வை.அரங்கநாதன் சொன்னது…

பகலில் லுங்கி, மடித்து கட்டிய வேஷ்டி மற்றும் பெர்முடாஸ் அணிந்து எங்கும் செல்ல மாட்டோம் என்று முதலில் ஆண்கள் முடிவெடுக்கட்டும்

Yoga.s.FR சொன்னது…

ஆயுத பூஜை வாழ்த்துக்கள்!நல்லதோர் விடயத்தைப் பகிர்ந்திருக்கிறீர்கள்!உண்மையில் அந்த இரவு ஆடை(நைட்டி)என்பது கவர்ச்சிகரமானது!அது இரவில் அணியப்படுதலே சிறந்தது!ஆனால் நம் பெண்களோ கவர்ச்சியை பிறர் கண்ணுக்கு விருந்தாக்கினால்???????

சேக்காளி சொன்னது…

ஏன் இந்த கொலை வெறி பதிவு?

நாய் நக்ஸ் சொன்னது…

இல்லிங்க ....ஒரு சில விஷயத்துக்கு
ரொம்ப வசதியா இருக்குங்க ....

Rathna சொன்னது…

நைட்டி என்பது இரவு உடை, ஆனால் அதில் உள்ள வசதிகள் பட்டியலிட முடியாது. நீங்கள் கூறியது போல ஆங்கிலேயர்களைப்போல இடத்திற்க்கேற்றார்போல ஆடை அணிய வேண்டும் என்றால் ஜட்டி பாடி அணிந்து கொள்ளலாமா. ஆனால் இரவுநேர உடையை வீட்டில் மட்டுமே அணிந்து கொள்வதால் நீங்கள் கூறுவது போல உறுப்புகள் பெருக்கவோ சிருக்கவோ செய்யாது. அது உங்களுடைய கற்பனை. அதற்க்கு நேர்மாறாக அதிகமாக அழுத்தப்படுவதால் காற்று புக இயலாமல் வேர்வையும் அதனால் உண்டாகும் அறிப்பும்தான் அதிகரிக்கும், ஆண்கள் அதிக இறுகிய உள்ளாடை அணிவதால் இனபெருக்கத்திற்க்கான தன்மை குறைவதாக ஆராய்ச்சிகள் நிரூபித்துள்ளன. இறுக்கமான ஆடைகள் உடலுக்கு எவ்விதத்திலும் நன்மைதருவதே கிடையாது, குறிப்பாக பருத்தி ஆடைகளைத் தவிர வேறு ஆடைகளை இறுக்கமாக அணிவதால் தோல் வியாதிகள் ஏற்ப்படுகின்றன என்பதை அறிவியல் அதிக ஆண்டுகளுக்கு முன்பே நிரூபித்துள்ளது. நைட்டியை வீட்டில் இருக்கும் போது கிழவியோ குமரியோ யார் அணிந்தாலும் அது அவர்களது உடலுக்கு நல்லதும் வசதியானதும் தானே தவிர வேறு குறைகள் ஏற்ப்பட வாய்புகள் இல்லை.

பூங்குழலி சொன்னது…

பகலில் லுங்கி, மடித்து கட்டிய வேஷ்டி மற்றும் பெர்முடாஸ் அணிந்து எங்கும் செல்ல மாட்டோம் என்று முதலில் ஆண்கள் முடிவெடுக்கட்டும்

இது நல்ல பதில் ..நைட்டி மேல் உங்களுக்கு என்ன கோபமோ ?

-தோழன் மபா, தமிழன் வீதி சொன்னது…

@ கொ. வை.அரங்கநாதன்,

ஆடை விஷயத்தில், ஆண்களுக்கான வரையிரையை பெண்களுக்கு போடமுடியாது.

-தோழன் மபா, தமிழன் வீதி சொன்னது…

@ SEKAALI: கொலை வெறியல்ல....நமது அடையாளங்களை நாம் இழக்க நேரிடுமே.... என்ற பயம்..

baleno சொன்னது…

இரவு உடை நைட்டி நிரந்தர உடையாகியது பற்றி நீங்கள் சொன்னது சரி. ஆண்களின் இரவு உடை பிஜாமா தானே? எதற்காக பெர்முடாஸ், வேஷ்டி, லுங்கி என்று சாதாரண உடைகளை பற்றி சொல்கிறார்கள்?

-தோழன் மபா, தமிழன் வீதி சொன்னது…

@naai-nakks



அதனால்தான், அதை எப்போதும் அணிகிறார்களோ....?

-தோழன் மபா, தமிழன் வீதி சொன்னது…

நன்றி ரத்னா அவர்களே!
எனது கட்டுரையின் உள் நோக்கமே பெண்கள், நமது பாரம்பரியமான ஆடையான சேலையை வீட்டில் அணிவைதை விட்டு, இப்படி எப்போது பார்த்தாலும் 'நைட்டியே' கதி என்று கிடக்கிறார்களே என்ற ஆதங்கத்தில்தான்.

அதுவும் போக...இப்படி எப்போதும் கட்டுப்பாடில்லாத ஆடையான நைட்டியை அணிவதால், உடல் பெருக்க வாய்ப்புள்ளது என்பது எனது கற்பனை அல்ல. அது வாஸ்துவமான உண்மை.

எப்போதும் நைட்டியில் இருக்கும் பெண்களை பார்த்தாலே தெரியும்.

தங்களது தோழமையான கருத்துக்களுக்கு நன்றி!

-தோழன் மபா, தமிழன் வீதி சொன்னது…

நன்றி பூங்குழலி!
நைட்டி மீது கோபம் ஒன்றும் இல்லை. அது 'பகல்டி'யாக, நேரம் காலம் இல்லாமல் பெண்கள் அணிவதைதான்.....?!

-தோழன் மபா, தமிழன் வீதி சொன்னது…

@Baleno

பைஜாமா என்பதுகூட நமது ஆடையன்று, அது வடக்கத்தியரின் ஆடை. நமது ஆடை வேஷ்டிதான். சாரம் எனப்படும் லுங்கி முகமதியரின் ஆடை. அது ஆண்களுக்கான சௌகரியமான இரவு உடைதான், ஆனால், அதை ஆண்கள் எப்போதும் அணிவதில்லையே.....?

baleno சொன்னது…

ஆண்களுக்கான சௌகரியமான இரவு உடைதான் ஆனால் அதை ஆண்கள் எப்போதும் அணிவதில்லையே.....?

ஆண்களுக்கான சௌகரியமான இரவு உடை பிஜாமா. ஆண்களின் ஆடைகளான பெர்முடாஸ், வேஷ்டி, லுங்கியோடு இரவு உடை நைட்டியை ஒப்பிட்டது தான் எனக்கும் ஆச்சரியம் தந்தது.

-தோழன் மபா, தமிழன் வீதி சொன்னது…

@ Baleno

வேஷ்டி என்பது நமது உடை. மிகவும் உயர்வான அந்த உடையை, வாழ்வின் முக்கிய தருணங்களில் அதை நாம் பயன்படுதுகிறேம். பெர்முடாஸ் மற்றும் லுங்கியை ஆண்கள் எப்போதும் பயன்படுத்துவதில்லை.

Baleno உங்களிடம் இரண்டு கேள்வி?
1 பிஜாமா என்பதுதான் சரியா...?
2 உங்கள் வலைதளத்தை காண முடியவில்லையே ஏன்?

baleno சொன்னது…

பிஜாமா என்பதுதான் சரியா...?
பிஜாமா சரியா பிழையா என்பது தெரியாது. இரவு உடை நைட்டி மாதிரி ஆண்களின் இரவு உடை பிஜாமா என்று ஆங்கிலத்தில் அழைக்கபடும் என்பது மட்டுமே தெரியும். பெண்களுக்கும் இரவு உடையாக பிஜாமா உண்டு. நீங்கள் கூறிதான் வடக்கத்தியரின் ஆடை என்பது தெரியும்.
உங்கள் வலைதளத்தை காண முடியவில்லையே ஏன்?
இல்லாத ஒன்றை எப்படி காண முடியும்.

-தோழன் மபா, தமிழன் வீதி சொன்னது…

@ Baleno,
உண்மைதான்... இல்லாத ஒன்றை எப்போதுமே காணமுடியாதுதான். ஆனால், உணரமுடியும். உங்கள் பதிலைப் போல....!

பெயரில்லா சொன்னது…

because I have some problem with Tamil font, I am writing in English. Pardon me.
''Nightie ''
British ladies used to wear 'Gowns' lined with bones and you might have seen that they will be standing flouted and trailing.
So, wearing this dress, they cannot sleep.
That's why they used light weight, flexible dress.But our dearest 'LADIES' [ THERE IS A LOT OF DIFFERENCE IN THE MEANING OF WORDS ,ladies, women, female,and girls. But we use it meaninglessly.
Our saree and sudithar is a very comfortable dress to our nation.
''we have always copied them 'half cooked '

தி.தமிழ் இளங்கோ சொன்னது…

“நைட்டியை கழற்றவே மாட்டாங்களா?“ – என்று நீங்கள் ஆதங்கப் படுவது சரிதான். பகலாயினும் இரவாயினும் பெண்கள் வீட்டில் நைட்டியை வீட்டில் அணிந்து கொள்வதில் தவறில்லை. ஆனால் ரேஷன் கடை, பள்ளிகள் போன்ற பொது இடங்களுக்கும் அணிந்து வருவது சரியல்ல. ஏனெனில் நைட்டி உடை அணிந்த பெண்கள் மீது படும் பல ஆண்களின் பார்வையைப் பற்றி அவர்களுக்குத் தெரியாது. சில விஷயங்களில் ( பொது இடங்களில் ) ஆணுக்குப் பெண் சமம் என்று போனால் அசிங்கமாகி விடும்.

'அடியோஸ் அமிகோ' -மலையாள திரைப்படம் விமர்சனம்

படம் பார்த்தப்பின் ஏனோ... வாய் விட்டு அழணும் போல தோன்றியது.  ஒரு சின்னக் கதையை எடுத்துக்கொண்டு சரசரவென, நூல் பிடித்து, வல்லியதொரு சுவாரசியமா...