திங்கள், டிசம்பர் 19, 2011

ஜெயலலிதா அதிரடி முடிவு: சசிகலா அதிமுவில் இருந்து நீக்கம்.


                           
சசிகலா உட்பட அவரது குடுத்தினர் எல்லோரும் அதிமுகவிலிருந்து நீக்கம்.


அதிமுகவில் இருந்து வி.கே.சசிகலா, ம.நடராஜன், திவாகர் (மன்னார்குடி), டிடிவி. தினகரன், வி.பாஸ்கரன், வி.என்.சுதாகரன், டாக்டர். எஸ்.வெங்கடேஷ், எம்.ராமச்சந்திரன், இராவணன், மோகன் (அடையாறு), குலோத்துங்கன், ராஜராஜன் உள்ளிட்ட 12 பேர் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளனர் என்றும், அஇஅதிமுகவினர் யாரும் இவர்களுடன் எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது என்றும் அஇஅதிமுக பொதுச்செயலாளரும், முதல் அமைச்சருமான ஜெயலலிதா அறிவித்துள்ளார்.



சசிகலாவை அவர் கட்சியிலிருந்துதான் வெளியேற்றி உள்ளார் போயஸ் கார்டனலிருந்து அல்ல என்பது குறிபிடத்தக்கது. கொஞ்ச நாளாய் புகைந்துக் கொண்டு இருந்த ஒரு விஷயம் இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
 
 
     

5 கருத்துகள்:

G.M Balasubramaniam சொன்னது…

முதன் முத்லாய் உங்கள் பதிவுக்கு வருகிறேன். முதலய்க் கருத்தும் இடுகிறேன். கவிதை வீதியும் கண்டேன். நன்ன் என் மனதில் பட்டதைக் கூறுபவன். சில நேரங்களில் அது விரும்பப் படாமலும் போகலாம். ஆனால் நிச்சயமாக யாரையும் புண்படுத்தும் எண்ணம் கிடையாது. இந்த அரசியல் விளையாட்டுக்களை நான் கண்டு கொள்வதில்லை. அவர்களே கூறுவார்கள் அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை. நிரந்தர எதிரியும் இல்லை என்று. ஆனால் நிரந்தர ஏமாளிகளாக நாம் இருக்கிறோம். நரி இடம் போனால் என்ன வலம் போனால் என்ன ,நம் மீது விழுந்து குதறாமல் இருந்தால் சரி. நீங்கள் அரசியல் வாதியாக இல்லாத பட்சத்தில் உங்கள் எழுதும் திறன் வேறு விதங்களில் மிளிரலாமே.உ-ம் உங்கள் கவிதை வீதி. நன்றாயிருக்கிறது.

G.M Balasubramaniam சொன்னது…

இந்த முந்தைய கருத்து இந்த இடுகைக்கு மட்டும்தான்.

Yaathoramani.blogspot.com சொன்னது…

நல்ல துவக்கமாக இருந்தால் நல்லது
பார்ப்போம்
த.ம 1

-தோழன் மபா, தமிழன் வீதி சொன்னது…

திரு GNB அவர்களுக்கு வணக்கம்.

உங்களது முதல் வருகைக்கும் நல்லதொரு ஆலோசனைக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

கவிதை வீதியை இன்னும் உயிர்ப்புடன் கொண்டு செல்ல உங்களது வாழ்த்து நிச்சயம் ஒரு 'கிரியா ஊக்கி'யாக இருக்கும்.

எனது தொழில் பத்திரிகை சார்ந்து இருப்பதால், அரசியல் பதிவு தவிர்க்க முடியாததாகிவிடுகிறது. மற்றபடி எப்போதும் அரசியல் எழுதுவதில்லை.

உ.ம் பார்சிக்கள் எப்படி இந்தியாவிற்கு வந்தார்கள்?, மற்றும் அவர்களுது வாழ்க்கை முறை பற்றியும், சென்னையில் மெட்ரோ ரயில் பற்றியும் பதிவிட்டுள்ளேன், மீதி அடுத்த அடுத்த பதிவுகளில் வருகிறது.

அரசியல் பதிவு என்பது, நாளை இதைப்பற்றிய விபரம் தேவைப்படும் என்பதாகவும் இருக்கலாம்.

தங்கள் வருகைக்கு நன்றி. தொடர்ந்து எனது தளத்திருக்கு வரவேண்டும். உங்களது ஆலோசனைகளை மிகுந்த மதிப்பு மிக்கதாக நான் கருதுகிறேன்.
நன்றி அய்யா!.

-தோழன் மபா, தமிழன் வீதி சொன்னது…

@ Ramani.

நிச்சயம் நல்ல துவக்கமாக இருக்கும்மென்று எதிர்பார்ப்போம். அது மக்களுக்கும் பயன்படவேண்டும். தங்களது வருகைக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

'அடியோஸ் அமிகோ' -மலையாள திரைப்படம் விமர்சனம்

படம் பார்த்தப்பின் ஏனோ... வாய் விட்டு அழணும் போல தோன்றியது.  ஒரு சின்னக் கதையை எடுத்துக்கொண்டு சரசரவென, நூல் பிடித்து, வல்லியதொரு சுவாரசியமா...