திங்கள், டிசம்பர் 26, 2011

குடும்பத்தினர் எல்லோரும் ஒரே இடத்தில் கூடுவது பாதுகாப்பானதா....?




                "விமான பயணத்தின்போது நானும் எனது மனைவியும்  சேர்ந்து பயணம் செய்வதில்லை. நான் ஒரு நாள் முன்னதாகவோ... அல்லது அடுத்தடுத்த... விமானத்திலேயோ  பயணம் செய்வோம்.   எதாவது  ஒரு அசம்பாவிதம் நடந்து எங்களில் யாராவது ஒருவர் இறந்துவிட்டால் கூட,  ஒருவர் இருந்து குழந்தைகளைக்  காப்பாற்றலாமே...  என்பதால்தான்" என்றார் இந்தி நடிகர் அமிதாப்பச்சன்.

இந்தியாவின் புகழ் வாய்ந்த நடிகர் இப்படி சொன்னது பலரையும் ஆச்சரியப்படுத்தியது. 'என்ன அமிதாப்பச்சன் இப்படி முன்னெச்சரிக்கை முத்தண்ணாவக இருக்கிறாரே..? '  என்று  நாம் கிண்டல் செய்யலாம்.!.  ரெண்டு பேர் சேர்ந்து போனா என்ன உடனே செத்தாப்போயிடுவாங்க என்று  கூட கேட்கலாம்?.


ஆனால்,  சென்னை பழவேற்காட்டில் நடந்த துயரச் சம்பவம், அவர் சொன்னது சரிதானோ என்று நினைக்கத் தோன்றியது.


21 பேரும் ஒரே இடத்தில்
 
முதலில் இது சாதாரண மற்றுமொரு விபத்து என்றே மக்கள் நினைத்தனர். ஆனால், நேரம் செல்ல செல்லத்தான்  விஷயத்தின் விபரீதம் புரிந்தது. இறந்தது அனைவரும் ஒரே குடும்பத்தினர் என்ற போது.... தமிழகமே உறைந்து போனது!.


கிருஸ்துமஸ் (ஞாயிறு) அன்று சென்னை பழவேற்காட்டில் நடந்த சம்பவம் தமிழ் நாட்டையே அதிர்சிக்குள்ளாக்கியது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 22
 பேர் நீரில் முழுகி இறந்துள்ளனர்.  சுந்தர பாண்டியன் அவரது மனைவி ஜெயஜோதி, அவரது ஒரு மகள்,  4 மகன்கள் , அவர்களது மனைவிகள்
மற்றும் மகன் மற்றும் மகளின்  குழந்தைகள் என்று மொத்த குடும்பமே பலி ஆகியிருக்கிறார்கள்.


பொதுவாக இந்த துயரச் சம்பவங்கள் விடுமுறை நாள்களில்தான் அதிகம் நடைபெறுகிறது.

விடுமுறை மற்றும் விசேஷ நாட்களில்  குடும்பத்தினர் ஒரே இடத்தில் கூடி கொண்டாடுவது இயற்கையான  ஒன்றுதான். ஆனால் அந்தக் கொண்டாட்டம் பாதுகாப்பானதா என்பதுதான் கேள்விக்குறி.

ஒரே குடும்பத்தில் அதுவும் 22    பேர் இறப்பதென்பது கனவிலும் நடந்திராத ஒன்று.

பழவேற்காடு சம்பவத்தில் அந்த       குடும்பத்தினர் பாதுகாப்பு விஷயத்தில் கொஞ்சம் கூட அக்கறைக் கொள்ளவில்லை 
என்பது நன்றாகவேத்தெரிகிறது.  முன்னெச்சரிக்கை  இல்லாவர்களால், இன்று அனைவரும் தங்களது  உயிரை இழந்ததோடு மட்டுமல்லாமல், 
மூன்று சிறுவர்களையும் அனாதைகளாக தவிக்க விட்டுள்ளனர்.   

  
 ஏதோ...மொத்தக் குடும்பமும் தரையில் பிரயாணம் பண்ணுவதுபோல் பிரயாணம் செய்துள்ளனர். தரை வேறு தண்ணிர் வேறு என்பதை அவர்கள் அறியவில்லை கொஞ்சம் கூட உணரவில்லை.  ஒரு சிறு தவறு பெரும் விபத்தினை தோற்றுவித்துள்ளது.


தேவை முன்னெச்சரிக்கை !

   திருமணம், காதுகுத்தி,  குடும்ப நிகழ்ச்சிகள், துக்க காரியம் போன்றவற்றிக்கு செல்லும்போது வேனிலோ அல்லது லாரியிலோ புளிமூட்டை போல் திணித்துக் கொண்டு செல்கின்றனர்.  ஒரு வளைவில் திரும்பும்போது, வண்டி மொத்தமாய் கவிழ்ந்து பெரும் உயிர் பலி ஆகின்றது. 


இப்படித்தான் சில வருடங்களுக்கு முன்னர், சென்னைக்கு அருகில் உள்ள சுங்குவார்சத்திரத்தில் டிராக்டரில் திருமணத்திற்கு   சென்றவர்களை பெட்ரோல் டேங்கர் லாரி மோதி அனைவரும் எரிந்து சாம்பலாயினர், என்பது நினைவிருக்கலாம்.

         நம்மில் பெருவாரியான மக்கள் பிரயாணத்தின் போது பாதுகாப்பைப் பற்றித் துளியும்  கவலைப்படுவதில்லை. எந்த வண்டியில் எந்த அளவிற்கு ஏற்ற முடியுமோ அந்த அளவிற்குதான் ஆட்களை ஏற்ற வேண்டும். கொள்ளலவைத் தாண்டி ஏற்றும்போதுதான் அது விபத்தில் முடிந்துவிடுகிறது.



குடும்பத்தினர் கூடும்போது கவனிக்கவேண்டியவை.....

  • கூடுமானவரை குடும்பத்தினர்  எல்லோரும் ஒரே வண்டியில் பிரயாணம் செய்வதை  தவிர்த்திடுங்கள்.
  • சுற்றலா போகும் இடத்தில் படகு பயணம் என்றால் 'லைப் ஜாக்கெட்' பயன்படுத்துங்கள்.
  • அப்படியே படகு பயணம் என்றால் எல்லோரும் ஒரே படகில் ஏற வேண்டாம். குழுவாக பிரிந்துக் கொண்டு பயணம் செய்யலாம்.
  • சிறு குழந்தைகளை வைத்துக் கொண்டு ஆபாத்தான பயணம் மேற்கொள்ளவேண்டாம்.
  • முக்கியமாக  நமக்கு எந்த ஆபத்தும் நிகழாது என்று நினைக்க வேண்டாம்.
         ' யாரும் தெரிந்தே ஆபத்தில் சிக்கிக் கொள்ளமாட்டார்கள் என்பதை உணர்ந்து எப்போதும் விழிப்புடன் இருப்பதே  நலம்.'


 

10 கருத்துகள்:

ப.கந்தசாமி சொன்னது…

// நமக்கு எந்த ஆபத்தும் நிகழாது//

இதுதான் நம் சாபக்கேடு.

-தோழன் மபா, தமிழன் வீதி சொன்னது…

'நாம் குடும்பத்தோடு சேர்ந்திருக்கும் போது பாதுகாப்பைப் பற்றி கவலைப்படாமல் இருப்பதும் நமது சாபக்கேடுதான்.'

தங்களது கருத்துரைக்கு நன்றி ஐயா!

சசிகலா சொன்னது…

சிறு குழந்தைகளை வைத்துக் கொண்டு ஆபாத்தான பயணம் மேற்கொள்ளவேண்டாம்.

எல்லோரும் தெரிந்திருக்க வேண்டிய உண்மை நன்றி .

anthimaalai@gmail.com சொன்னது…

அருமையான, சமுகப் பார்வையுள்ள படைப்பு. இதன் பயன் பலரையும் சென்றடைய வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் இதனை எங்கள் இணையத்தில் மறு பதிவிட விரும்புகிறேன்.
"ஒன்றுபட்டு உயர்வோம்"
இ.சொ.லிங்கதாசன்
ஆசிரியர்
www.anthimaalai.dk

Unknown சொன்னது…

Very useful advise

Rathnavel Natarajan சொன்னது…

பயனுள்ள பதிவு.

-தோழன் மபா, தமிழன் வீதி சொன்னது…

கருத்திட்டமைக்கு நன்றி சசிகலா.

-தோழன் மபா, தமிழன் வீதி சொன்னது…

@ இ.சொ.லிங்கதாசன்

தங்களது முதல் வருகைக்கும் நம்பிக்கைத் தரும் பின்னோட்டதிற்கும் எனது மனமார்ந்த நன்றி!.

எனது இந்தப் பதிவை நீங்கள் தாராளமாக பயன்படுத்தலாம்.
நல் சமூகத்தைக் கட்டி எழுப்பும் உங்களது முயற்சிக்கு எனது வாழ்த்துகள்.

-தோழன் மபா, தமிழன் வீதி சொன்னது…

தங்களது முதல் வருகைக்கும் பின்னோட்டதிற்கும் நன்றி நாரதர்!

-தோழன் மபா, தமிழன் வீதி சொன்னது…

@ Rathnavel, தங்களது வருகைக்கும் பின்னோட்டதிற்கும் நன்றி ஐயா.

வெட்பாலை

        வெட்பாலை செடி வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தேன்.  பொதுவான நர்சரிகளில் தேடியும் கிடைக்கவில்லை. ஆச்சர்யம்,  அமேசானில் கிடைத்தது ! ...