இலங்கையில் தமிழர்கள் மீதான இனப்படுகொலையில், இந்தியாவின் ஆளும் காங்கிரஸ் கட்சி சிங்கள இனவாத அரசுக்கு பல்வேறு ராணுவ உதவிகளை செய்துவந்தது. இலங்கையில் தமிழர்கள் அழித்தொழிப்பு நடவடிக்கையில் சிங்கள அரசுடன் இனைந்து காங்கிரஸ் அரசு பகிரங்கமாக ஈடுப்பட்டு வந்தது. இந்தியாவை பகைத்துக் கொள்ள வேண்டாம் என்று உலக நாடுகள் இந்த விவகாரத்தில் தலையிடாமல் ஒதுங்கியே இருந்தன.
இந்த நயவஞ்சக காங்கிரஸ் அரசை வீழ்த்த பா.ஜ.க., வினால்தான் முடியும் என்று நினைத்து இருத்தேன். காங்கிரஸ் பிரச்சாரம் விஸ்வரூபம் எடுத்துக் கொண்டு இருக்க, பா.ஜ.க.,வினர் டப்பா தட்டிக்கொண்டு இருந்தனர்.
மொக்க பிரச்சார உத்திகள்.
மொக்க பிரச்சார உத்திகள், பிரதமர் யார் என்று அறிவிக்காதது, இளம் தலைமுறையினருக்கு வாய்ப்பு அளிக்காதது, பலம் இல்லா கூட்டணி, வியுகம் அமைத்து பிரச்சாரம் செய்யாத்து என்று இவர்கள் தோற்க ஆயிரம் காரணம்.
மற்ற கட்சியினர் காசை தண்ணிராய் செலவு செய்ய... இவர்கள் இறுக்கி கட்டிய முடிச்சை அவிழ்க்காதது. எப்படி தெரியுமென்று கேட்கலாம்? தேர்தல் விளம்பரம் தொடர்பாக தென் சென்னையில் போட்டியிட்ட இல. கணேசன் அவர்களிடம் பேச சென்றேன், அவரது அண்ணன்தான் பேசினார். பிசாத்து ருபாய்க்கு பேரம் பேசி, கடைசி வரை விளம்பரம் தரவேயில்லை. நாங்கள் புலம்பிக்கொண்டு வந்ததுதான் மிச்சம்.
காங்கிரசை தாலையில் தட்டி மூலையில் குந்தவைப்பார்கள் என்று எதிர்ப்பார்த்த என் போன்றவர்களுக்கு, காங்கிரசின் அரிதிப் பெரும்பாண்மை அதிர்ச்சியை அளித்தது. கார்கில் போர், பொக்கரான் அணுகுண்டு வெடிப்பு என்று 5 வருடம் இந்தியாவை வழி நடத்திச் சென்றவர்கள், தடுமாறிப்போனார்கள். தமிழர்களின் வாழ்வில் விடிவு காலம் பிறக்கும் என்று எதிர்ப்பார்த்த எங்களுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது.
" நான் முதலில் இந்தியன். பிறகுதான் இஸ்லாமியன்" - ஜின்னா.
இந்திய,பாகிஸ்தான் பிரிவினை குறித்தும் பாகிஸ்தானின் தந்தையான முகம்மது அலி ஜின்னா குறித்தும் முன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் எழுதிய புத்தகம் பெரிய அரசியல் புயலைக் கிளப்பியிருக்கிறது. அதன் முதல் சுற்றில் ஜஸ்வந்த் சிங் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். இப்போது புயலின் மையம் அத்வனியை நோக்கித் திரும்பியிருக்கிறது.
ஜின்னா இந்தியாவிடமிருந்து பாகிஸ்தானை பிரித்தது நல்லதா, கெட்டதா என்று இப்பொது நாம் ஆராயத் தேவையில்லை. இன்னும் சொல்லப் போனால், முஸ்லிம்களுக்கு என்று தனி நாடு அமைவதை ஜின்னா எதிர்த்துதான் வந்துள்ளார்.
ஒரு வலுவான தேசியவாதியாக, உண்மையான காங்கிரஸ்காரராகத் தான் தனது அரசியல் வாழ்வை தொடங்கினார் ஜின்னா. காங்கிரசின் மூத்த தலைவர்களிள் ஒருவராக உருவெடுத்தார் அவர். " நான் முதலில் இந்தியன். அதன் பிறகுதான் இஸ்லாமியன்" எனக் கருதினார்.
கோகலேயின் ஆலொசனைப்படிதான் ஜின்னா முஸ்லீம் லீகில் சேர்ந்தார். அடிப்படை மதவாதிகளிடமிருந்தும், ஆங்கிலேயர்களின் அரவணைப்பிலிருந்தும், முஸ்லீம் லீகைக் காப்பாற்றி காங்கிரஸோடு நல்லுரவை வளர்க்க வேண்டும் என்பதுதான் ஜின்னாவின் நோக்கம்.
ரஹமத் அலியின் பாகிஸ்தான் பிரிவினைத் திட்டத்தை அவர் ஏளனம் செய்தார்.
இப்படி தேச ஒற்றுமைக்காக குரல் கொடுத்த ஜின்னா, 1940 ஜனவரி முதல் பிரிவினைப் பாதையில் மெல்ல மெல்ல நடக்கத்தொடங்கினார். அவருக்கு அதரவுப் பெறுகி பாகிஸ்தான் பிரிந்தது தனிக் கதை.
பா. ஜ. க., வின் சின்ன புத்தி!
இப்படி உள்ளதை உள்ளப்படி எழுதியிருக்கிறார் ஜஸ்வந்த் சிங். இதில் கதையின் நாயகனை புகழ்ந்தும் எழுதியிருக்கிறார். ஆர்.எஸ்.எஸின் கிளையாகச் செயல்படும் பா.ஜ.க.,விற்கு இது பெரும் தலைவலியாக இருக்க... சற்றும் எதிர்பாராமல் ஜஸ்வந்த் சிங்கின் தலையில் கைவைத்து விட்டார்கள். முன்பு ஒரு முறை அத்வானி பாகிஸ்தான் சென்றிருந்தபோது இதே போல் ஜின்னாவை புகழ்ந்து பேசி சிக்கலில் மாட்டிக் கொண்டார். 'தலை தப்பியது தம்பிரான் புண்ணியம்' என்று அவர் தப்பியது தனிக் கதை.
இப்படி ஜின்னாவைப் பற்றிப் பேசினால், அவர்களது சின்ன புத்தியால் அதை ஜீரணித்துக் கொள்ளமுடியாது என்பதுதான் உண்மை.
எது எப்படியோ! பா.ஜ.க வில் இருந்துக் கொண்டு ஜின்னாவைப் பற்றி எழுத தனி துணிச்சல் வேண்டும். அதற்காகவாவது ஜஸ்வந்த் சிங்கை நாம் பாரட்ட வேண்டும்.
இந்தியர்களால் தூற்றப்பட்ட ஜின்னாவின் ஆவி இந்த முறை எத்தனைப் பேரை 'பலி' கொள்ளப் போகிறது என்று தெரியவில்லை?