வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் 'தெய்வத் திருமகள்' படம் பூசான் திரைபட விழாவிற்கு தேர்வுசெய்யப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் தென் கொரியாவில் செப்டம்பர் 13லிருந்து 21ம் தேதி வரை 'பூசான்' BIFF திரைப்பட விழா நடைபெறுகிறது. 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட பூசான் திரைப்பட விழா ஆசிய நாடுகளில் எடுக்கப்படும் திரைப்படங்களுக்கு முன்னுரிமை தரப்பட்டு, உலகளாவிய கவனத்தை ஏற்படுத்தித்தர இந்த திரைபட விழா நடத்தப்படுகிறது. இதில் தமிழகத்திலிருந்து விஜய் இயக்கியுள்ள 'தெய்வத் திருமகள்' படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
சீயான் விக்ரம் நடித்துள்ள இப்படம் 'I AM SAM' என்ற ஆங்கில படத்தை தழுவிஎடுக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை தேர்வு செய்த இக் குழுவின் தலைவர் கிம் கூறியதாவது. " I AM SAM படத்தோட இன்ஸிபிரேஷன்னு சொன்னாங்க. கொஞ்சம் யோசனையோடுதான் படம் பார்த்தேன். ஆனா, இந்தப்படம் மொத்தமே வித்தியாசமா இருக்கு அந்தப் படத்தோட செண்டிமெண்ட் லெவலை 'தெய்வத் திருமகள்' அடுத்த லெவலுக்கு கொண்டு போயிருச்சு. நான் ஆசிய சினிமாக்களின் பிரிவில் இந்தப் படத்தை பிளேஸ் பண்ணாலாமுனு ஐடியா வச்சிருந்தேன். ஆனா, இப்போ ஒப்பன் கேட்டகிரியில் உலக சினிமாக்களுக்கான வரிசையில் பிளேஸ் பண்ணி இருக்கிறேன் என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக