ஞாயிறு, அக்டோபர் 02, 2011

குமுதத்தில் நடக்கும் குடிமிபிடிச் சண்டை?!







இன்றைய (02/10/2011) ஆங்கில நாளிதழ்களில் ஒரு 'காஷன் நோட்டிஸ்' விளம்பரம்,  குமுதம் நிறுவனத்தால் கொடுக்கப்பட்டு உள்ளது.  அதில்... இனி குமுதம் நிறுவனத்திற்கும்,  குமுதம் நிறுவன ஆசிரியர் மற்றும் இயக்குநரான டாக்டர் எஸ்ஏபி ஜவஹர் பழனியப்பனுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்றும்,   அவரது பங்குகள் அனைத்தும் உடனடியாக எந்தவித அறிவிப்பும் இன்றி ரத்துசெய்யப்படுகிறது. இனி குமுதம் நிறுவனம் தொடர்பாகவும் அதன் சஞ்சீகைகளோடும் அதன்  ஆசிரியர் கூழுவோடும்  அவருக்கு எந்தவித சம்மதமும் இல்லை. 

இனி குமுதம் நிறுவனம் தொடர்பாக அவரை யாரும் தொடர்புகொள்ள வேண்டாம் என்றும் அப்படி மீறி தொடர்பு கொண்டால் அதற்கு அவர்களே முழு பொறுப்பு என்ற ரீதியில் அந்த விளம்பரம் உள்ளது.  அதோடு, ஜவகர் பழனியப்பன் ஒரு வெளிநாட்டு பிரஜை என்றும்,  அவர் NRI என்றும்  விளம்பரத்தில் இரு முறை குறிப்பிடப்பட்டுள்ளது, குறிபிடத்தக்கது.

விளம்பரத்தை  குமுதம் பப்ளிகேஷன்சின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் பி வரதராஜன் தந்திருக்கிறார்.

பல வருடங்களாக புகைந்த ஒரு விஷயம் இன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

குமுதத்தை கட்டுப்பாட்டில் கொண்டுவர போட்டி?

குமுதம் நிறுவன ஆசிரியர் மற்றும் இயக்குநரான டாக்டர் எஸ்ஏபி ஜவஹர் பழனியப்பனுக்கும் குமுதம் பப்ளிகேஷன்சின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் பி வரதராஜனுக்கும் குமுதம் நிறுவனத்தை யார் கட்டுபாட்டில் எடுத்துக் கொள்வது என்று  பெரும் போரட்டமே நடந்துவருகிறது.  அதன் விளைவாகவே இந்த விளம்பரம்   கொடுக்கப்பட்டுள்ளது,

குமுதத்தை நிறுவிய ஆசிரியர் எஸ்ஏபி அண்ணாமலையின் மகன்தான் டாக்டர் ஜவஹர் பழனியப்பன்.  இவர்தான் குமுதம் உள்ளிட்ட அதன் குழும இதழ்களின் நிறுவன நிர்வாக ஆசிரியர்.   குமுதம் குழும இயக்குநராகவும் உள்ளார்

குமுதம் நிறுவனத்தின் பதிப்பாளராக இருந்த மறைந்த பிவி பார்த்தசாரதியின் மகன்தான் வரதராஜன். குமுதத்தின் மேலாளராக இருந்து, பார்த்தசாரதி மறைவுக்குப் பின்னர் பதிப்பாளரானார்.

அமெரிக்காவில் பிரபல இதய நோய் நிபுனரான டாக்டர் ஜவஹர் பழனியப்பன்,   ஒங்கியோ மாகானத்தில் மவுண்ட் வெர்னாவில் வசித்து வருகிறார்.  அமெரிக்காவில் வசித்து வருவதால், குமுதம் மற்றும் ரிப்போர்டர் இதழ்கள் தயாரானதும் அவரது ஒப்புதலுக்காக அமெரிக்கா அனுப்பப்பட்டு அனுமதிபெறப்பட்டு வந்தது.


குமுதம் நிர்வாகம் மற்றும் ஆசிரியர் குழு அனைத்தையும் நிர்வாக இயக்குனர் வரதராஜனே கவனித்து வந்தார்.

இன்னிலையில் குமுதத்தில் அவரது பிடி அதிகமாக  அதிகமாக, கொஞ்சம் கொஞ்சமாக டாக்டர் ஜவஹர் பழனியப்பன் ஒரங்கட்டப்பட்டார்.  குமுததிற்கும் அவருக்கும் சம்பந்தம் இல்லை என்று விளம்பரம் கொடுக்கும் அளவிற்கு விஷயம் விபரீதமாக முடிந்திருக்கிறது.



நிதி மோசடி:  வரதராஜன் கைது!



இன்னிலையில்தான் கடந்த ஏப்ரல் மாதம் 24ம் தேதி நிதி மோசடி, நிர்வாக முறைகேடுகள் போன்ற குற்றங்களின் அடிப்படையில், ஜவஹர் பழனியப்பன் கொடுத்த புகாரின் அடிப்படையில் வரதராஜன் கைது செய்யப்பட்டார்.

.

குமுதத்தை முழுக்க தனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ள வரதராஜன் முயற்சித்ததாகவும், அதற்காக ஆசிரியர் குழு உள்ளிட்ட அனைத்து விஷயங்களிலும் தலையிட்டதாகவும் அவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. மேலும் நிறுவனத்தின் நிதியை தனது சொந்த காரணங்களுக்காக தவறாக பயன்படுத்தியுள்ளார் என்று குமுதம் நிறுவன உரிமையாளர் என்ற வகையில் குற்றச்சாட்டை அளித்திருந்தார் ஜவஹர் பழனியப்பன்.

அன்று  இரவு கைது செய்யப்பட்ட வரதராஜன், காரில் வைத்து பலமணி நேரம் அலைகழிக்கப்பட்டர். சில மணி நேர விசாரணைக்குப் பிறகு ஜாமீனில் விடப்பட்டார்.

அவர் மீது  நிதி மோசடி, நிர்வாக முறைகேடுகள்  போன்ற குற்றங்களின் அடிப்படையில், 323, 341, 342, 344, 365, 307, 25 (1) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது.


விசாரிக்க குழு  அமைத்த கலைஞர்.

குமுதம் விவகாரம் தொடர்பாக விசாரிக்க குழு ஒன்றை தமிழக அரசு நியமிக்கும் என அன்றைய முதலமைச்சர்  கருணாநிதி சட்டமன்றத்தில் அறிவித்திருந்தார்.  இது தொடர்பாக அவர் சட்டமன்றத்தில் கூறியதாவது....



குமுதம் பப்ளிகேஷன்ஸ் உரிமையாளர் ஜவஹர் பழனியப்பனின் புகாரின் பேரில்தான் வரதராஜன் கைது செய்யப்பட்டார் என்று கூறிய முதல்வர்  கருணாநிதி, தமது அரசு பத்திரிகை சுதந்திரத்தை மதித்தே நடக்கும் என்றும், தமிழ்நாட்டின் முன்னணி வார இதழான குமுதம் நிர்வாகிகளுக்கிடையே ஏற்பட்டிருக்கும் பிரச்சினைக்குத்  சுமுக தீர்வு காணும் நோக்கில் குழு ஒன்று அமைக்கப்படும் என்றும் அறிவித்திருந்தார்.


நிறுவனத்தின் தலைவர் என்ற முறையில் அவருக்கு நிர்ணயிக்கப்பட்ட ஆறு லட்ச ரூபாய் சம்பளத்தை 10 லட்சம் ரூபாயாக திருத்தி, பல கோடி ரூபாய் அளவுக்கு அவர் மோசடி செய்தார் என்று வரதராஜன் மீது பழனியப்பன் புகார் கூறியிருந்தார்.

ஆனால் வரதராஜனோ, தன்னிடமுள்ள பங்குகள் அனைத்தையும் தன்னிடம் விற்றுவிடுமாறு பழனியப்பன் தன்னை வற்புறுத்தினாரென்றும் அதற்கு தான் மசியாததால் தன் மீது வீண்பழி சுமத்துவதாகவும் அப்போது அவர் கூறினார்.



ஆட்சி மாற்றம் காரணமா....?


கடந்த திமுக ஆட்சியின் போது டாக்டர் ஜவஹர் பழனியப்பனின் 'கை' ஓங்கியிருந்தது. குமுதம் விவகாரத்தில் அன்றைய திமுக அரசு,  ஜவஹர் பழனியப்பன் பக்கம் இருந்து செயல்பட்டதாக  பதிப்பாளர் வரதராஜன் நினைத்தார்.  அதுவுமில்லாமல்,  அப்போதைய காவல் துறை, வரதராஜனை கைது செய்து நீதிபதி முன் ஆஜர் படுத்தாமல் அங்கும் இங்கும் அலைகழித்தது. அவர் எங்கு இருக்கிறார் என்பதையும் கூட சொல்ல மறுத்தது போலீஸ்.

இதனால் கடுப்பான வரதராஜன்,  ரிப்போர்ட்டரில் திமுக அரசை கடுமையாகச் சாடி எழுத... ஆசிரியர் குழுவை முடிக்குவிட்டார்.   நடந்த  சட்டமன்றத்  தேர்தலில் திமுகவிற்கு எதிராகத்தான் இருந்தது குமுதம் நிர்வாகம்.

அதோடு... ஜவஹர் பழனியப்பனை குமுதத்திலிருந்து வெளியேற்ற நல்ல நாள் பார்த்த வரதராஜனுக்கு, வசமாக வாய்த்தது ஜெயலலிதா தலைமையிலான புதிய  அரசு.  அதனால் நிர்வாகக் குழு(?)வை கூட்டி ஜவஹர் பழனியப்பனை நீக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  அதுவே இப்போது விளம்பரமாக வெடித்திருக்கிறது.


 மனமாற்றம் வேண்டும்.
  • ஜவஹர் பழனியப்பன் மருத்துவத்துறையில் அதிக ஈடுபாடு கொண்டவர் என்பதால், குமுதம் நிர்வாகத்தில் அவர் அவ்வளவாக தலையிடுவதில்லை. அதுவே அவருக்கு எதிராக போய்விட்டது என்கிறார் விஷயம் தெரிந்த ஒருவர்.
உட்கார்ந்திருப்பது எஸ்.ஏ.பி. நிற்பது பி.வி.பி.


  • குமுதம் இந்தளவிற்கு வளரக் காரணம் எஸ்.ஏ.பியும் அவரது நண்பர் (பி.வி.பி) பார்த்தசாரதியும்தான்.  இருவரது நட்பும்  அயராத உழைப்பும்தான் குமுதத்தை உயரத்தில் ஏற்றிவைத்தது.  இருவரும் விட்டுக் கொடுத்து வழிநடத்தி சென்றனர். 9 லட்சம் பிரதிவரை விற்பனையாகி குமுதம் உச்சம் தொட்டு நின்றபோது, இருவரது நட்பும் உலக பிரச்சித்தமானது. 
  • ஆனால் இப்படி இருவரது வாரிசுகள்,  மோதிக் கொள்வது குமுதம் வளர்ச்சிக்கு நல்லதல்ல என்கிறார் குமுதத்தின் நீண்ட வருட வாசகர் ஒருவர். 

இன்னிலையில் ஜவஹர் பழனியப்பனும் தனது  தரப்பு நியாயத்தை  சொல்ல.... விரைவில் ஒரு விளம்பரத்தைத் வெளியீடுவார் என்கிறது விஷயம் அறிந்த ஒரு பட்சி!?


7 கருத்துகள்:

Advocate P.R.Jayarajan சொன்னது…

பல ஆண்டுகளாக சிறந்த முறையில் நடந்து வருகின்ற ஒரு ஒரு மிகப் பெரிய வார இதழ் 'குமுதம்'.

அதில் இப்படிப்பட்ட சண்டைகள் தேவையில்லை.

பேசி தீர்த்துக் கொள்வது முறையானதாக இருக்கும்.

-தோழன் மபா, தமிழன் வீதி சொன்னது…

நமது விருப்பமும் அதுதான். மக்கள் மனங்களைக் கவர்ந்த குமுதம் வாரயிதழ் ஒன்றுபட்டு இருந்தால் தமிழ் பத்திரிகை உலகிற்கு நல்லது.

தங்கள் வருகைக்கு நன்றி!

vijayan சொன்னது…

இக்குழப்பத்தின் காரணமாய் குமுதம் இதழ் நிரந்தரமாய் மூடப்பட்டால் அது தமிழ் சமுதாயத்திற்கு செய்யும் பேருதவியாகும்.விஜயன் .

Unknown சொன்னது…

//இக்குழப்பத்தின் காரணமாய் குமுதம் இதழ் நிரந்தரமாய் மூடப்பட்டால் அது தமிழ் சமுதாயத்திற்கு செய்யும் பேருதவியாகும்.விஜயன் . //

விஜயனின் கருத்தை முழுமனதோடு ஆதரிக்கிறேன்.

நாய் நக்ஸ் சொன்னது…

I accept the same with
vijan

umesh சொன்னது…

kumudam ippodhu irukkum tharathai parthal adhai moodi viduvathe best

பெயரில்லா சொன்னது…

it is good for Tamil people

வெட்பாலை

        வெட்பாலை செடி வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தேன்.  பொதுவான நர்சரிகளில் தேடியும் கிடைக்கவில்லை. ஆச்சர்யம்,  அமேசானில் கிடைத்தது ! ...