சனி, ஆகஸ்ட் 20, 2011

'தமிழர்களுக்கு குடிக்கக் கற்றுக் கொடுத்த 'கோ' மகள்'.

 தமிழ்மணம் நட்சத்திர பதிவு !

டாஸ்மாக் மதுபானக் கடை

இன்று தெருவுக்குத் தெரு டீ கடை இருக்கிறதோ இல்லையே அம்மா ஜெயலலிதா புண்ணியத்தில் மூலைக்கு மூலை டாஸ்மாக் இருக்கிறது. ஒயின்ஷாப்புகளை அரசுடமையாக்கி தமிழர்களை குடிக்கு அடிமையாக்கிய பெருமை ஜெயாவையே சாரும். 

முந்தைக்கும் முந்தைய  ஜெயா ஆட்சியில் திமுகாவினர் சிண்டிக்கேட் அமைத்து ஒயின்ஷாப்புகளை நடத்தி வந்தனர். அதிகம் பணம் புழங்கும் இந்த போதை தொழிலில் திமுகவினரின் ஆதிக்கத்தை நினைத்து பொறுமிய ஜெயலலிதா அவர்களின் கொட்டத்தை அடக்க என்ன செய்யாலாம் என்று யோசித்ததன் விளைவுதான்,  அதை அரசே ஏற்று நடத்துவது.


உலகில் எங்கேயாவது இந்த அநியாயத்தை கேள்விபட்டிருக்கிறீர்களா....? அரசாங்கமே போதை பொருள் விற்பதை!

இந்த அநியாயம் வேறு எங்கும் நடக்கவில்லை. 'கல்தோன்றி மண் தோன்றா முன் தோன்றிய மூத்த குடி' என்று நாம் வாய்கிழிய பேசுகிறோமே அந்த செந்தமிழ் நாட்டில்தான் இந்த அவலம். 'யாதும் ஊரே யாவரும் கேளீர்' என்றாரே கனியன் பூங்குன்றனார். அவர் பிறந்த திரு நாட்டில்தான் இந்த அவலம்.
 
காங்கோ உகாண்டா போன்ற ஆப்ரிக்க நாடுகளில்தான் மக்களை சிந்திக்க விட வேண்டாம் என்றும் அரசும், தீவிரவாத குழுக்களும்  போட்டி போட்டுக் கொண்டு  போதை பொருட்களை விற்பனை செய்யும். விற்பனை என்றால் இப்படி ரோட்டுக்கு ரோடு அல்ல...மறைமுகமாக கள்ள மார்கெட்டில் விற்பனை செய்வார்கள்.  அனால் இங்கே.....?

ஒயின்ஷப்புகளை நடத்துவதில்  திமுகவினர் ஆதிக்கம்.

அன்றைய அதிமுக ஆட்சியில் திமுகவினரின் கையில்தான் பெரும்பான்மையான ஒயின்ஷாப்பும் பார்களும் இருந்தன. திமுக ஆட்சி போன பின்னரும் அவர்கள் கை இறங்குவதாக இல்லை.  அதனால் ஜெயலலிதா திமுகவினரின் ஆதிக்கத்தை ஒழிக்க  'தமிழ்நாடு மதுவிலக்குச் சட்டம் - 1937 ' ஒரு திருத்தம் செய்து ஏல முறையை கொண்டுவந்தார். இதில் அதிகம் வருவையுள்ள கடைகள் பிரிக்கப்பட்டு ஏலம் விடப்பட்டு குலுக்கள் முறையில் பிரித்தளிக்கப்பட்டன. 


ஆனால் இந்தத் தொழிலில் (?) பழம் தின்று கொட்டை போட்டவர்கள் அவ்வளவு எளிதில் விட்டுத்தருவார்களா?  ஏலம் எடுக்க யாரும் வராமல் பார்த்துக் கொண்டனர். அப்படியே எடுத்தாலும் அதை தங்களுக்குள் பேசி வைத்துக் கொண்டு கடைகளை பிரித்துக் கொண்டனர். இது ஜெயலலிதாவை இன்னும் வெறுப்பேற்றியது. இயல்பாகவே கண்மூடித்தனமான பிடிவாதம் கொண்ட ஜெயலலிதா அப்போதுதான் அந்த விபரீத முடிவை எடுத்தார். அதாவது அரசாங்கமே ஒயின்ஷாப்புகளை  ஏற்று நடத்துவது.  அதுவரை யாருக்கும் அப்படிபட்ட யோசனை தோன்றி இருக்காது.  கேள்வியும் பட்டு இருக்கமாட்டார்கள். முடிவெடுத்தப் பின் துணிந்து செயலில் இறங்கினார் ஜெயலலிதா.  மீண்டும் மது விலக்கு சட்டத்தில் திருத்தம் செய்து அக்டோபர் மாதம் 2003ம் வருடம் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் (Tamil Nadu State Marketing Corporation) மூலமாக டாஸ்மாக்கை தொடங்கினார்.   



இந்த ஈன காரியத்தை ஜெயலலிதா செய்யாமல் கருணாநிதி செய்திருந்தால், என்ன நடந்திருக்கும் தெரியுமா....? 

ஊடகங்கள் ஒன்று திரண்டு இருக்கும். பேசியும் எழுதியும் கருணாநிதியை கிழித்தெடுத்திருப்பார்கள். மடங்கள் வரிந்து கட்டிக் கொண்டு வந்திருக்கும். எதிர்ப்புகள் சுனாமியாய் எழுந்து அந்த திட்டத்தை அடியோடு ஒழித்துவிட்டுதான் உக்கார்ந்திருப்பார்கள். 

இன்று தெருவுக்கு தெரு, ஊருக்கு ஊர் என்று திரும்பிய பக்கமேல்லாம் ஒயின் ஷாப்புகளை ஆரம்பித்து, வருடத்திற்கு 12ஆயிரம் கோடி ரூபாய் கல்லா கட்டுகிறது தமிழ அரசு.

குடிக்க பயம் இல்லை.

இப்படி பிறந்ததுதான்  'டாஸ்மாக்'. அன்று தனியாரிடம் இருந்தபோது என்ன நிலையில் இருந்ததோ அதே நிலையில்தான் இருக்கிறது டாஸ்மாக். முன்பு இருந்த கெடுபிடிகள், கூடுதல் விலையில் சரக்கு விற்பனை என்று எல்லா அவலங்களும் இன்றும் தொடர்ந்துக் கொண்டுதான் இருக்கிறது. பார்  நடத்துவர்களின் அராஜக போக்குகளுக்கு கொஞ்சமும்  குறைந்து விடவில்லை.

தமிழன் ஈயோடு ஈயாய் உட்கார்ந்து சரக்கு   அடித்துவருகிறான்.
  
அரசாங்கமே ஊத்தித் தருவதால் மக்களுக்கு குடிக்க பயம் இல்லாமல் போச்சு. முன்பெல்லாம் குடிக்க போகும்போது  பயந்து பயந்து பம்மிக்கொண்டு குடிப்பார்கள். ஆனால் இன்றைய நிலை...? அதை நான் சொல்ல மாட்டேன். அது உங்களுக்கே தெரியும்.

தனியார் துறையிடம் ஒயின்ஷப்புகள் இருந்தபோது... குடிமகன்கள் போலீசை கண்டால் கொஞ்சம் அடங்கி போவார்கள்.  அரசே ஒயின்ஷாப்புகளை ஏற்று நடத்திவுடன் குடிமகன்களை கண்டால் போலீஸ் அடங்கி போனது.



கண்டுகொள்ளாத கருணநிதி

தமிழக அரசியலில் ஒரு விஷயம் எப்போதும் கடைபிடிக்கப்படும். ஒரு ஆட்சி கொண்டுவந்த திட்டத்தை, அடுத்து வரும் ஆட்சி  அமுல்படுத்தாது. அந்தத் திட்டதை ரத்து செய்துவிடும். அப்படிதான் எல்லோரும் எதிர்பார்த்தார்கள். ஜெயலலிதா கொண்டுவந்த டாஸ்மாகை கருணாநிதி கலைத்து விடுவாறென்று. ஆனால் நடந்தது வேறு....!



முதலில் எதிர்த்த கருணாநிதி, பின்னர் அதிலிருந்து கொட்டிய வருமானத்தைப் பார்த்து அப்படியே டாஸ்மாக்கிற்கு ஷாஷ்டாங்கமாய்  நமஸ்காரம் செய்துவிட்டார்.  'தொறடா டாஸ்மாக்கை' என்று தெருவுக்குத் தெரு திறந்து அரசு கஜானாவை நிறப்பத் தொடங்கினார். அப்போதுதானே தான் அறிவித்திருக்கும் இலவச திட்டங்களுக்கு பணம் சேர்க்க முடியும்.


தமிழ்நாட்டு மக்களைப் பற்றி  கவனம் கொள்ளாமல், தனது ஆட்சி அதிகாரத்தை இந்த டாஸ்மாக்கை கொண்டு பலப்படுத்தவே கருணாநிதி முயன்றார். இவரது ஆட்சி காலத்தில் ஒரு நல்ல விஷயம் நடந்தது. அது நாள் வரையில் இரவு 11 மணி வரை திறந்திருந்த கடைகள் இரவு 10 மணிவரைதான் என்று மாற்றம் செய்யப்பட்டது.

இன்று எல்லா மட்டத்திலும் குடிகாரர்கள் இருக்கிறார்கள். குடிப்பது தவறில்லை என்பதை இன்றைய தலைமுறையினருக்கு அரசாங்கமே குழப்பமில்லாமல் தெளிவாகவே (?) சொல்லாமல் சொல்லிவருகிறது.



பல  கேள்விகள் ?
  • இது ஒரு நல்ல திட்டம் என்றால் ஏன் பிற மாநிலங்கள் இதை தங்களது மாநிலத்தில் அமுல் படுத்தவில்லை? 
  • பாண்டிச்சேரி என்றாலே நமக்கு தண்ணி பற்றிதான் ஞாபகம் வரும். அந்த அளவிற்கு சரக்கு அங்கு சகஜம். அந்த மாநிலத்தில் ஏன் அரசாங்கமே ஒயின்ஷப்புகளை ஏற்று நடத்தவில்லை....?
  • அயல் நாட்டு மது விறபனை செய்யலாம் என்றால். தமிழர்களின் பாரம்பரியமான கள்ளுக்கு தடை ஏன்?


நாம் போராடுவோம்!

பாமக நிறுவனர் இராமதாஸ் மட்டுமே அவ்வப்போது  டாஸ்மாக்கிற்கு எதிராக குரல்கொடுத்து வருகிறார். பிற தமிழக தலைவர்களும் குரல் கொடுக்கவேண்டும்,  போராடவேண்டும்,  தமிழன் தலை நிமிர்ந்து நடக்க   டாஸ்மாக்கை அழிதொழிக்கும் போராட்டத்தில் இறங்குவோம்.

"தமிழ் நாட்டில் படிக்காதவனை விட... குடிக்காதவனே இல்லை" என்ற பெருமையை தமிழ் நாட்டிற்கு பெற்று தந்த பெருமைக்குரியவர் ஜெயலலிதா.  அதை துடைத்து,  இந்த அவலத்தை தமிழனிடமிருந்து போக்க நாம் போராடுவோம்.  டாஸ் மாக்கை அழித்து தமிழக மக்களை காப்பற்றுவோம்.



*************



14 கருத்துகள்:

Saravanaa சொன்னது…

Naan yedho kalla sarayathai olikka than arasu tasmark yeduthu nadathudhunu nenachen. Idhula ivlo politics irukka? Adhu sari forin sarakai vida namma kallu better thane? Yen aduthavanuku kodukura kasai namma kallu viyabarigaluku kodukka koodadhu? Yaaru poonaiku mani katradhu?

Robin சொன்னது…

இப்போதெல்லாம் தண்ணியடிப்பது ஒரு பேஷனாகி வருகிறது. குடிக்கமாட்டேன் என்றால் ஒரு மாதிரியாகப் பார்க்கிறார்கள் :)

rajamelaiyur சொன்னது…

Super artical. . . Well work

-தோழன் மபா, தமிழன் வீதி சொன்னது…

உண்மைதான் குடிப்பது சாதாரணமானது என்பது போல் ஆக்கிவிட்டார்கள்

-தோழன் மபா, தமிழன் வீதி சொன்னது…

நன்றி "என் ராஜபாட்டை"- ராஜா! வருகைக்கும் வாழ்த்திற்கும்.

Hariharan சொன்னது…

பழசை மறந்துவிட்டு புதுசை மட்டும் பேசுவது தான் இன்றைய கலாச்சாரமா.. 1972 வரை இருந்த மதுவிலக்கை தமிழ்நாட்டில் இருந்து நீக்கி கருணாநிதி ஆரம்பித்து வைத்த கலாச்சாரத்தை அரசுக்கு வருமானம் வரும் வகையில் மாற்றினார் ஜெயா.. அதை கடந்த ஆட்சியில் நீக்கி திரும்பவும் பூரண மதுவிலக்கை கொண்டு வந்திருக்கலாம்.. இதெல்லாம் கண்ணில் படாதே..

-தோழன் மபா, தமிழன் வீதி சொன்னது…

கருணாநிதி மதுவிலக்கை விலக்கிக் கொண்ட சூழல் வேறு. அப்போது மது விற்பணை தனியாரிடம்தான் இருந்தது. இந்தளவிற்கு குடிகாரர்களும் இல்லை. அவர்கள் ஊருக்கு ஒதுக்கு புரமாகவோ அல்லது ஊருக்கு வெளியிலோ வைத்து பொது மக்களுக்கு இடையூரு இல்லாமல் வியாபரம் செய்தனர். ஆனால் ஜெயலலிதா கதை வேறு. 'அரசாங்கமே சாராயம் விற்கும்' என்ற வரலாற்றுப் பிழையை செய்தவர் ஜெயலலிதா. அரசுக்கு வருமானத்தை ஏற்படுத்தித்தந்தார் என்றால், அரசுக்கு வருமானம் வர இன்னும் பற்பல தொழில்கள் (?) இருக்கின்றன. அதையும் தனது ஆட்சிக்காலத்தில் தொடங்கலாம்.

தனது ஆட்சிக்காலத்தில் டாஸ்மாக்கை மூடாத கருணா நிதியையும் இக் கட்டுரையில் கண்டித்திருக்கிறோம். ஆனால் டாஸ்மாக்கை ஆரம்பித்து வைத்த பொது குற்றவாளி ஜெயலலிதாதான், எனபதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

சுதா SJ சொன்னது…

நல்ல பதிவு நண்பா, ஆனால் இவ்விடயத்தில் ஜெயாவை மட்டும் குற்றம் சாட்டி விட முடியாது, இதை ஜெயாவை ஆரம்பித்ததாக இருக்கட்டும்
அதன் பின் வந்த கருணாநிதி இதை நிறுத்தி இருக்கலாமே.....

-தோழன் மபா, தமிழன் வீதி சொன்னது…

நன்றி துஷ்யந்தன்.நீங்கள் சொல்வது உண்மைதான். வரலாறு தந்த வாய்ப்பை கருணாநிதியும் தவறவிட்டார். இனி வரும் காலங்களிலாவது டாஸ்மாக்கை தமிழ்நாட்டிலிருந்து ஒழித்தாகவேண்டும்.

manikandan சொன்னது…

appa nanga yenna pondycherry pakkam poratha sasrakku adikka

manikandan சொன்னது…

dasmac aa muditta sarakku adikka yenga porathu

-தோழன் மபா, தமிழன் வீதி சொன்னது…

நன்றாக கவனிக்க வேண்டும் மணிகண்டன். அரசாங்கமே கடையை திறந்து இப்படி ஊத்தி கொடுப்பது தவறில்லையா....? உலகில் எங்கேயாவது இந்த அநியாயம் உண்டா சொல்லுங்கள்....?

aotspr சொன்னது…

பதிவுக்கு நன்றி.
நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com

KSRAJA சொன்னது…

Madam please governmentised the private schools and private engg colleges YOU HAVE THE GUTS

வெட்பாலை

        வெட்பாலை செடி வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தேன்.  பொதுவான நர்சரிகளில் தேடியும் கிடைக்கவில்லை. ஆச்சர்யம்,  அமேசானில் கிடைத்தது ! ...