நண்பர்
பை
நிறைய மல்லிகை மொட்டுகளை எடுத்துவந்திருந்தார். அவரின் தோட்டத்தில்
விளைந்த மல்லிகை பார்க்க அழகாக குண்டுக் குண்டாக இருந்தது. மல்லிகையின்
மனம் மனதை அள்ளியது.
எல்லோருக்கும் பிரித்துக்
கொடுக்க அவரவர் ஒரு பிளாஸ்டிக் பையில் வாங்கிக் கொண்டனர். எனக்கு கொடுக்க
வரும்போது, பிளாஸ்டிக் பை இல்லை. நானும் தேடு தேடு என்று தேடினேன் பை கிடைக்கவில்லை. பிறகென்ன இன்னொரு நாள் வாங்கிக் கொள்கிறேன் என்று விட்டுவிட்டேன்.
வீட்டிற்கு வந்ததும் எதேச்சையாக பாண்ட் பாக்கெட்டில் கை விட, அங்கே ஒரு பிளாஸ்டிக் பை கையேடு வந்தது. காலையில் கலர் ஜெராக்ஸ் எடுத்தபோது கொடுத்த அந்த மெல்லிய பிளாஸ்டிக் பை என்னிடம்தான் இருந்திருக்கிறது.
நாம் தேடுவது எதுவாக இருந்தாலும் அதை பிரிதொரு இடத்தில்தான் தேடுகிறேம். அது நம்மிடம் இருக்கிறதா இல்லையா என்பதை உறுதி செய்யாமலேயே.....?

-ஜல்லியடிப்போம் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக