அப்படி இப்படி என்று அது நிகழ்ந்து விட்டது. விகடனில் நம் எழுத்து வெளிவராதா என்று விட்டத்தைப் பார்த்து கனவு கண்டது பலித்துவிட்டது.
கிட்டத்தட்ட 15 வருடத்திற்கு மேலாக விகடனின் வாசிப்பாளனாக இருக்கிறேன். அதன் அத்தனை பக்கங்களிலும் எனது பார்வை பதிந்து மீண்டு இருக்கிறது. விகடன் சிறப்பிதழாக 'என் விகடன்' தொடங்கி வலைப்பதிவர்களுக்கா 'வலையோசை' பகுதியை தொடங்கியதும், நமக்கும் ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்தேன்.
பாத்ரூம்ல பாடுறவனுக்கு, ஆயிரம் பேருக்கு மத்தியில மேடையில பாட வாய்ப்பு தந்தது போல, வலைப் பதிவர்களுக்கான புதிய பாதையை அமைத்துத் தந்துள்ளது விகடன். 7-8 ,மாதங்களுக்கு முன்னர் விகடனுக்கு எனது வலைத் பதிவைப் பற்றி எழுதியிருந்தேன். அதற்கு போன வாரத்தில்தான் விகடனிடமிருந்து போன் வந்தது.
விகடன் தலைமை நிருபர் ம.கா. செந்தில் குமார் பேசினார். விகடனிடமிருந்து போன் என்றதுமே ஒரு பரவசம் தொற்றிக் கொண்டது. அதுவும் உங்கள் வலைத் தளத்தை தேர்ந்தெடுத்துள்ளோம் என்றதும் பரவசம் பல மடங்காகியது.
பத்திரிகையில் பணி புரியும் எனக்கே இந்த சந்தோஷம் என்றால், சாமா னியனைப் பற்றி கேட்கவே வேண்டாம். That's Vikatan!.
விகடனுக்கும், ம.கா. செந்தில் குமாருக்கும், எனக்கு வாழ்த்து சொல்லிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக