செவ்வாய், ஜூன் 19, 2012

கன்னியம்மன் கோயில் கும்பாபிஷேகம்.



      குத்தாலம்:-   நாகை மாவட்டம்  குத்தாலம் தாலுகாவில் உள்ள (மயிலாடுதுறை - கும்பகோணம் மார்க்கம் ) திருவாலங்காட்டில்  எழுந்தருளியுள்ள   "  ஸ்ரீ கன்னியம்மன்' ஆலைய கும்பாபிஷேகம் கடந்த வியாழன் (07 /06 / 2012 ) அன்று நடைபெற்றது. 250 ஆண்டுகளுக்கு முற்பட்ட ஸ்ரீ கன்னியம்மன் ஆலய கும்பாபிஷேகத்தை திருவாவடுதுறை ஆதினம் இளைய சந்நிதானம் நடத்திவைத்தார்.    


கடந்த 2000 மாவது ஆண்டில் ஒரு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதைத்
தொடர்ந்து 12  வருடங்களுக்குப் பிறகு கடந்த ஜூன் 7ம் தேதி   கும்பாபிஷேகம் நடைபெற்றது.    காவிரி நதியில் இருந்து புனித நீர் எடுத்து வரப்பட்டு விக்னேஷ்வர பூஜை, சோமகும்ப பூஜை, பூர்ணாஹூதி, ஸ்பர்சாகுதி, கடஸ்தாபனம், சுதைகளுக்கு கண் திறத்தல் உள்பட பல்வேறு யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. பின்னர் கோபுர விமானங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து கோ பூஜை, மகா தீபாராதனை உள்பட பல்வேறு பூஜைகள் செய்யப்பட்டு அன்னதானம் வழங்கப்பட்டது.

மாலையில் அம்மன் வீதியுலா நடைபெற்றது.    நாற்வீதியும் சுற்றிவந்த கன்னியம்மன்,  விடியற் காலையில்தான் நிலையை அடைந்தது.  அதில் திரளான பக்தர்கள் கலந்துக் கொண்டனர்.  இரவில் கண்ணைக் கவரும் வாண வேடிக்கை நடத்தப்பட்டது.


விழாவில் திருவாலங்காடு ஊராட்சி மன்றத் தலைவர் சீதா பாலசுந்தரம்,
மாதிரிமங்கலம் ஊராட்சி மன்றத் தலைவர் செல்வம், அதிமுக மாவட்ட கவுன்சிலர் விஜய பாலாஜி, ஒன்றிய கவுன்சிலர் ஜகபர் அலி மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் பலர் கொண்டார்கள்.  விழா ஏற்பாட்டினை  கிராம நாட்டாண்மை த.பாலு சிறப்பாக செய்திருந்தார்.  

2 கருத்துகள்:

Rathnavel Natarajan சொன்னது…

அருமையான பதிவு.
அருமையான படங்கள் இணைத்திருக்கிறீர்கள்.
வாழ்த்துகள்.

-தோழன் மபா, தமிழன் வீதி சொன்னது…

தொடர் கருத்துகளுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்!

வெட்பாலை

        வெட்பாலை செடி வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தேன்.  பொதுவான நர்சரிகளில் தேடியும் கிடைக்கவில்லை. ஆச்சர்யம்,  அமேசானில் கிடைத்தது ! ...